கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 14:54

சென்னை

சென்னை மாநகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு புதிதாக 173  பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை (13-10-2021) கொரோனா வைரஸ் தொற்று நோயால் 5 லட்சத்து 52 ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

சென்னையின் 15 மண்டலங்களில் அடையாறில் 165 பேர், தண்டையார்பேட்டையில் 119 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அண்ணா நகரில் இதுவரை அதிகபட்சமாக 56,620 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 53,386 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 26 லட்சத்து 82 ஆயிரத்து 137 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்து உள்ளனர்.  (நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 1,280 பேர்)  

இதுவரை 26 லட்சத்து 30 ஆயிரத்து 654 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து, குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். (நேற்றைய டிஸ்சார்ஜ் எண்ணிக்கை  1,453 பேர்)

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நிலவரம்:

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா 5,52,121 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சென்னையில் தற்போது வரை கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1,835 பேர் (நேற்றைய எண்ணிக்கை 1,842 பேர்) மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மருத்துவச் சிகிச்சைக்கு பெற்று இதுவரை குணம் அடைந்தவர்கள் 5 லட்சத்து 41 ஆயிரத்து 773 பேர்.

சென்னையில் இதுவரை 8,513 பேர் (நேற்றைய எண்ணிக்கை  8,512  பேர்) கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை  35,833 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் விவரம்:

15 மண்டலங்களிலும் மருத்துவ சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 250க்கும் குறைவாக உள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் இன்று 1,835 பேர் (நேற்றைய எண்ணிக்கை 1,842 பேர்) கொரோன வைரஸ் நோய் தடுப்புக்கான மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

திருவொற்றியூரில் 47 பேரும்

மணலியில் 26 பேரும்

மாதவரத்தில் 56 பேரும்

தண்டையார் பேட்டையில் 119 பேரும்

இராயபுரத்தில் 99 பேரும்

திரு.வி.க. நகரில் 119 பேரும்,

அம்பத்தூரில் 132 பேரும்,

அண்ணாநகரில் 164 பேரும்,

தேனாம்பேட்டையில் 193 பேரும்,

கோடம்பாக்கத்தில் 176 பேரும்,

வளசரவாக்கத்தில் 127 பேரும்,

அடையாறில் 165 பேரும்

பெருங்குடியில் 120 பேரும்

சோழிங்கநல்லூரில் 99 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவச் சிகிச்சை பெற்றுவருபவர்கள், குணமடைந்தவர்கள் விவரம் சென்னையின் மண்டலவாரியாக கீழே தரப்பட்டுள்ளது: