கொரோனா தடுப்பூசி போடவில்லையா, டாஸ்மாக் சரக்கு கிடையாது ஓடு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 13:18

ராமநாதபுரம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லையென்றால், டாஸ்மாக் சரக்கு கிடையாது என்று அதிரடியாய் அள்ளி விட்டுள்ளார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்.

கொரானோ தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா அதற்கான சான்றிதழை காட்டுங்கள். உங்கள் செல்போனில் தடுப்பூசி போட்ட பின்னர் வந்த குறுஞ்செய்தி யையாவது காட்டுங்கள். இல்லையேல் உங்களுக்கு காலி பாட்டீல் கூட தரமாட்டோம் என்று அறிவித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்.

விஜயதசமி, ஆயுத பூஜை  விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை கூடுதலாக இருக்கும். கடைகளில் கூட்டமும் இருக்கும். இரு நாட்களிலும் தலா 300 கோடி விற்பனை யாகும். இந்த நாட்களில் இப்படியொரு உத்தரவை அரசு போட்டால் எப்படி என்று பரிதாபமாக கேட்கிறார் ஒரு குடிமகன்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 3வது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.