முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் பிரார்த்தனை

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 11:37

புதுதில்லி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பிரார்த்திக்கிறேன் என  பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் காரணமாக முன்னள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை புதன்கிழமை (13-10-2021) இரவு தெரிவித்திருந்தது.

பிரதமர் மோடி பிரார்த்தனை

டாக்டர் மன்மோகன் சிங் ஜி விரைவில் குணமடையவும் நலமுடன் இருக்கவும் தாம் பிராத்திப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்  தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன்..

என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் நலம் விசாரிப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

2004 மே முதல் 2014 மே வரை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.