முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல் நலக்குறைவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 21:30

புதுடெல்லி, அக்டோபர் 13,

காங்கிரஸ் ஆண்ட பொழுது 2004 முதல் 2014 வரை இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இன்று உடல்நல குறைவால்  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மன்மோகன் சிங் திடீரென உடல்நலம் இழந்தார்.

புதன்கிழமை மாலை 6.15  மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். அவரை உடனடியாக இதய நோய் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க துவங்கினார்கள்.

ஆக்டர் மன்மோகன் சிங்குக்கு பிரபல மருத்துவர் நிதிஷ் நாயக் தலைமையில் மருத்துவர் குழு ஒன்று சிகிச்சை அளிக்கிறது.