பொருள் போக்குவரத்தை துரிதப்படுத்துவதற்கான ரூபாய் 100 லட்சம் கோடி திட்டம்: பிரதமர் துவக்கினார்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 18:44

புதுடெல்லி, அக்டோபர் 13,

பயணச் செலவுகளை குறைப்பதற்காகவும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் பல்வகை பயண ஒரு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 100 கோடி செலவிலான மாஸ்டர் பிளான் ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று துவக்கி வைத்தார்.

புதிய திட்டங்கள் துவக்கப் படும் பொழுது அந்தத் திட்டத்தோடு சம்பந்தமுடைய  எல்லா சாதிகளையும் ஒரே மேடையில் இணைப்பதற்கு வகை செய்கிறது அதனால் திட்டங்கள் சிறைவாசம் குறைந்த செலவிலும் நிறைவேற்றப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் அரசு பின்பற்றும் சோம்பேறித்தனமான அணுகுமுறை காரணமாக இந்திய குடிமக்கள் செலுத்திய வரிப்பணம் அவமதிப்புக்கு ஆளானது. ஒவ்வொரு இலாகாவும் தங்களுக்கென வகுத்துக்கொண்ட கொள்கையில் மற்ற இலாகாக்கள் தொடர்பு இல்லாமல் செயல்பட்டார்கள்.

இத்தகைய தனித்தனியாக செயல்படும் போக்கு இருக்கக்கூடாது என்று இப்பொழுது உள்ள அரசு கருதுகிறது அதன் காரணமாக ஒருங்கிணைந்த வகையில் திட்டங்கள் மற்றும் பிரச்சனைகளை அடுத்த தீர்மானித்துள்ளது சாலைப் போக்குவரத்து முதல் ரயில் போக்குவரத்து விமானப் போக்குவரத்து விவசாயம் உள்ளிட்ட எல்லாத் துறைகளும் இணைந்த பயணத்  திட்டங்களை ஒருங்கிணைந்த வகையில் அணுகுவதற்கு பிரதமரின் வேகத்தின் சக்தி திட்டம் உதவும் என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவில் போக்குவரத்துக்கான திட்டங்களுக்கு ஆகும் செலவு இந்திய ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் 13 சதவீதமாக உள்ளது இது மிகவும் அதிகம் இத்தகைய கூடுதல் செலவு காரணமாக இந்தியாவில் பயணச்செலவு பொருள் போக்குவரத்து செலவு அதிகமாகிறது இதனை குறைப்பதற்காகவே இந்த மாஸ்டர் பிளான் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலீடு பெருக்க இந்தத் திட்டம் உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார் கடந்த 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இப்பொழுது உள்ள அரசின் வேகம் ஒருபோதும் காணப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.