அனல் மின்சார நிலையங்கள் 10 சதவீத நிலக்கரியை இறக்குமதி செய்ய மின்சார அமைச்சகம் அறிவுரை

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 14:01

புதுடெல்லி, அக்டோபர் 13,

அனல் மின்சார நிலையங்கள் தங்கள் 100% மின்சார உற்பத்தி தேவைக்கும் இந்திய நிலக்கரியை நம்பி இருக்கக் கூடாது தங்கள் தேவையில் 10 சதவீதத்தை யாவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய மின்சார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

தங்கள் மாநிலத்திலுள்ள மின் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்காமல் மின்வெட்டு அறிவித்துவிட்டு மின்சாரத்தை இந்திய மின்சார எக்சேஞ்ச் கூடுதல் விலைக்கு சில மாநிலங்கள் இருக்கின்றன அத்தகைய மாநிலங்களுக்கு மத்திய மின்சார நிறுவனங்கள் மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிடும் என்று மத்திய மின்சார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது நிலத்தடி இருப்பை பொறுத்தமட்டில் இந்தியா நான்காவது பெரிய நாடாக விளங்குகிறது.

இரண்டாவது கொரோனவைரஸ் தோல்விக்கு பிறகு இந்தியாவில் உற்பத்தி அதிகரித்துள்ளது அதனால் மின்சார தேவை பெருகியுள்ளது மின்சார தேவைக்கு ஏற்ப வினியோகம் செய்வதற்காக அனல் மின் சாதனங்கள் கூடுதலான அளவு மின்சாரத்தை பக்தி செய்ய வேண்டும் ஆனால் அனல் மின்சார நிலையங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரித்த காரணத்தினால் வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை அனல் மின்சார நிலையங்கள் முற்றிலும் நிறுத்தி விட்டன அதனால் உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுகிறது வட இந்தியாவில் உள்ள பீகார் ராஜஸ்தான் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் எல்லாம் நாளொன்றுக்கு 14 மணி நேரம் வரை மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளன.

இந்தப் பின்னணியில்தான் மத்திய மின்சார அமைச்சகம் 10 சதவீத நிலக்கரித் தேவையை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யும்படி மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் இருந்தது.

இந்தியாவில் நிலக்கரியை எரிபொருளாக கொண்ட 135 அனல் மின்சார நிலையங்கள் இயங்குகின்றன இவை நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 70 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் தேவை மூன்று நாட்கள் பயன்படும் அளவுக்குத்தான் நிலக்கரி இருப்பு வைத்துள்ளன.

மத்திய அனல் மின்சார நிலையங்கள் எல்லாம் தங்கள் உற்பத்தியை வினியோகம் செய்ய நீண்டகால ஒப்பந்தங்களை செய்துள்ளன. மத்திய அனல் மின்சார நிலையங்கள் தங்கம் உற்பத்தியில் 15 சதவீதத்தை மத்திய அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விதி உள்ளது.

இந்தப் பதினைந்து சதவீதம் மின்சாரம் யாருக்கும் ஒதுக்கப்படாத மின்சாரம் என்று குறிப்பிடப்படுகிறது.

 .இவ்வாறு மத்திய அரசுக்கு ஒதுக்கப்படும் 15 சதவீத மின்சாரத்தை தேவைப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகம் செய்து வருகிறது.

அனல் மின்சார நிலையங்கள் தங்களிடம் உபரி மின்சாரம் இருந்தால் உடனடியாக அது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நெஞ்சார இலாகா அறிவித்துள்ளது.

சில மாநிலங்கள் தங்கள் உள்ளூர் தேவையை முழுக்க பூர்த்தி செய்யாமல் மின்சார வைத்து அழித்து விட்டு மீதமுள்ள மின்சாரத்தை ஏஜென்சிகள் மூலம் கூடுதல் விலைக்கு மற்ற மாநிலங்களுக்கு விட்டு விடுகின்றன. இவ்வாறு விற்கப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் விலை 15 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த பின்னணியில்தான் மத்திய மின்சார அமைச்சகம் தங்கள் ஒட்டுமொத்த தேவையில் 15 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்படி அறிவுரை வழங்கியுள்ளது அது தவிர தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உள்ள மின்சார விநியோகம் செய்யாமல் அந்த மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் மத்திய அரசு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனல் மின்சார நிலையங்கள் எல்லாம் வெளிநாடுகளிலிருந்து 10 சதவீத நிலக்கரி தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அறிவுரை சர்வதேச அளவில் நிலக்கரி விலை உயர வழிவகுக்கும் என்று வெளிநாட்டு பத்திரிக்கைகள் கருத்து கூறியுள்ளன.