பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2021 15:43

ஸ்டாக்ஹோம்

2021ம் ஆண்டு பொருளாதாரத் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த டேவிட் கார்ட், அமெரிக்கவை சேர்ந்த ஜோஸுவா ஆங்ரிஸ்ட் மற்றும் கய்டோ இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது

இந்த ஆண்டிற்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிரிந்து அளிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று பொருளாதாரத் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பொருளாதரத்துறைக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த டேவிட் கார்ட், அமெரிக்கவை சேர்ந்த ஜோஸுவா ஆங்ரிஸ்ட் மற்றும் கய்டோ இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த ஆய்வு பங்களிப்பிற்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், மற்ற இருவருக்கு மற்றொரு பாதியும் வழங்கப்படுகிறது.