பெட்ரோல், டீசல் விலை முறையே 30, 35 பைசா உயர்வு

பதிவு செய்த நாள் : 08 அக்டோபர் 2021 15:28

புதுடெல்லி, அக்டோபர் 8,

இந்திய எண்ணெய் கம்பெனிகள் என்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 35 பைசாவும் உயர்த்தின.

விலை உயர்வு இன்று (8-10-2021) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் மெட்ரோபாலிட்டன் நகரங்களில் இன்றைய உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் வருமாறு:

டெல்லியில்

வெள்ளியன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 103 .54.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92. 12.

மும்பை

இன்று-வெள்ளியன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 109.54.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 99. 92.

கொல்கத்தா

இன்று-வெள்ளியன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.23.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 95. 23.

சென்னை

இன்று-வெள்ளியன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.01.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 96. 60.