மும்பை டெல்லி பங்குச் சந்தைகள் இன்று சரிவு

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2021 22:07

மும்பை,புதுடெல்லி,அக்டோபர் 6,

மும்பை பங்குச்சந்தையில் அதிகாரப்பூர்வ குறியீடான சென்செக்ஸ் மற்றும் டெல்லி தேசிய பங்குச் சந்தையின் அதிகாரப்பூர்வ குறியீடான நிப்டி இன்று கடும் சரிவை சந்தித்தன

மும்பை சென்செக்ஸ் செவ்வாயன்று மாலை 59744. 88ல் நிலைபெற்றது.

புதன்கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது பின் சென்ஸ்ஸ் இன்று 59189 .73 இல் நிறைவு பெற்றது. இன்றைய இறப்பு 555.15 ஆகும்.

டெல்லி தேசிய பங்குச்சந்தையில் அதிகாரப்பூர்வ குறியீடு ஆகிய நிப்டி 176.30 புள்ளிகளை இழந்தது.

செவ்வாயன்று வர்த்தக இறுதியில் 1782 2.30 ல் நிறைவு பெற்றது.

பதனன்று வர்த்தக இறுதியில் நிப்டி 17646 புள்ளிகளில் நிலைபெற்றது. ஆக இன்றைய இழப்பு 176.30 புள்ளிகள்.

ரூபாயின் மதிப்பு சரிவு

செவ்வாயன்று ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 74.44 பைசாவாக இருந்தது.

புதன் அன்று மாலை ஒரு அமெரிக்க டாலர் அதற்கான மாற்று மதிப்பு 74 . 98 ஆக சரிந்தது.

புதன்கிழமை மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான  இந்திய ரூபாயின் நாணய மாற்று மதிப்பு 54 பைசா சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.