இந்திய பங்குச் சந்தைகளில் 2வது நாளாக காளை ஓட்டம்

பதிவு செய்த நாள் : 05 அக்டோபர் 2021 17:12

மும்பை, அக்டோபர் 5,

இந்தியப் பங்குச்சந்தைகளில் இரண்டாவது நாளாக காளைப் பாய்ச்சல் இடம்பெற்றது. செவ்வாயன்று இந்திய பங்குச்சந்தைகளில் அடையாள குறியீட்டு எண்கள் ஆகிய சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை இரண்டாவது நாளாக உயர்ந்தன.

சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்ந்தது. இறுதியாக 59745 புள்ளி சென்செக்ஸ் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தக இறுதியில் நிலைபெற்ற புள்ளிகளை விட வர்த்தக மத்தியில் கூடுதலான புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீடு ஆகிய நிப்டி செவ்வாயன்று 131 புள்ளிகள் உயர்ந்தது.

17 822 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்றைய சென்செக்ஸ் உயர்வில் லாபம் அடைந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகும் அதன் பங்குகள் விலை 2% உயர்ந்தன.

இன்றைய சென்செக்ஸ் உயர்வில் பங்கு கொண்ட மற்ற நிறுவனங்கள்: ஆயில் நேச்சுரல் கேஸ் கமிஷன், இண்டஸ்இண்ட் பேங்க், கோல் இந்தியா, ஐஓசி, ஏர்டெல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் ஆகிய நிஃப்டியில் உயர்வில் பங்குகொண்ட நிறுவனங்கள்: சிம்ப்ளா ஹிண்டால்கோ . ஸ்ரீ சிமெண்ட்ஸ், சன் பார்மா டாட்டா கன்ஸ்யூமர் ப்ராடக்ட் ஸ்.