கோவிட் மருந்துகளுக்கான வரிச் சலுகை டிசம்பர் 31 வரை நீடிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 21:06

லக்னோ, செப்டம்பர் 17,

கோபிக்கு மருந்துகளுக்கான வரிச்சலுகையை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீடிப்பது என்று 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த தகவலை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே வரிச்சலுகை பெற்ற கோவித்து மருந்துகளுக்கான சலுகை அளிக்கப்பட்டதுடன் இரண்டு புதிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி சலுகை அளிக்கவும் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிதாக வரிச் சலுகை பெறும் கோவிட் மருந்துகளின் பெயர்கள் வருமாறு:

ஜோல்காங்கெல்ஸ்மா

வில்ட்எப்ஸ்கோ.

இரண்டு மருந்துகளுக்கும் வரிச் சலுகை வழங்குவது அரசுக்கு ரூ 16 கோடி வரி வருமான இழப்பு ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பல மாநிலங்களின் முதல்வர்கள் போதிய அவகாசம் இல்லாமல் இழப்பீடு நீடிப்பது குறித்து பேச முடியாது அதனால் இழப்பீடு நீடிப்பு குறிப்பு அடுத்து ஜிஎஸ்டி கவுன்சில் என்று முடிவு செய்து கொள்ளலாம் 2022ஆம் ஆண்டு வரை இழப்பீடு நீடிப்பது குறித்து பேசவும் முடிவு செய்யவும் அவகாசம் உள்ளது எனவே இப்பொழுது எந்த அவசரமும் இல்லை என்று மகாராஷ்டிர உதவி முதல்வர் அஜித் பவார், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேற்கு வங்காள நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போதுமான அவகாசம் தராத காரணத்தினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பணிகளை ஒதுக்கிவிட்டு நேரில் வர இயலவில்லை.

அதனால் தமிழக அரசின் கருத்தை தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று 13 பக்கம் உள்ள உரை ஒன்றை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ளார். அதில் இழப்பீடு பற்றி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பை உடனடியாக ஜிஎஸ்டிக்கு மாற்ற வேண்டியதில்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் 45வது ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு இப்பொழுது உடனடியாக முடிவு செய்ய வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்ட தாக கூறினார்.

கேரள மாநில உயர்நீதிமன்றம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பெட்ரோல் டீசலை சேர்ப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி அமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டது என நிர்மலா சீதாராமன் கூறினார்.

டீசல் உடன் சேர்ப்பதற்காக மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் பயோடீசலுக்கான எண்ணெய்க்கு வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு சேவை திட்டத்தில் பயன்படுத்தப்படும் இரும்பு சத்து கலந்த அரிசி மீதான ஜிஎஸ்டி  18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

மத்திய மருந்துப் பொருள்களில் இலாகா ஏழு மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி யை குறைக்க பரிந்துரைத்தது அந்த பரிந்துரைப்படி இந்த 7 மருந்துகளின் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை குறைக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்.