பிரதமரின் 71வது பிறந்த தினத்தன்று 2 கோடிக்கு மேல் தடுப்பூசி போட்டு சுகாதாரத்துறை சாதனை

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 19:23

புதுடெல்லி, செப்டம்பர் 17,

மத்திய சுகாதாரத் துறையும்  மாநில சுகாதாரத்துறை களும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த தினத்தன்று 2 கோடிக்கு மேல் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இன்று மாலை  5:10 மணி அளவில் இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 200,41, 136ஐத் தாண்டியது.

இத்துடன் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட அவர்களின் எண்ணிக்கை 78.68 கோடியை தாண்டியது.

நான்காவது முறையாக நாளொன்றுக்கு ஒரு கோடிக்கு மேல் இந்தியாவில் கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாந்தவியா பிரதமரின் 71வது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்று தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை நிகழ்த்த வேண்டும் அதுவே பிரதமருக்கு சிறந்த பரிசாக அமையும் என்று வியாழனன்று கூறினார்.

அதைத்தொடர்ந்து வெள்ளியன்று 2 கோடிக்கு மேல்கொரானா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.