பெரியாரின் பிறந்த நாளில் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 17:24

திருவனந்தபுரம்

பெரியாரின் 143வது பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன்  வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் தந்தை பெரியார் உருவச் சிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 பெரியாரின் 143வது பிறந்த நாளில் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் டுவிட்டரில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்.

இவ்வாறு, கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.