செப்டம்பர் 19ல் ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு தேர்தல்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 16:31

மாஸ்கோ, செப்டம்பர் 17,

செப்டம்பர் 19-ஆம் தேதி ரசிய நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக தேர்தல் பிரச்சாரம் எதுவும் நடைபெறவில்லை.

ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியில் மட்டும் அரசியல் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு அதன்மூலமாக தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது.

அரசு எதிர்க்கட்சிகள் மீது கடந்த ஜனவரி மாதம் எடுத்த அடக்குமுறை நடவடிக்கைகள் காரணமாக தேர்தல் மிக ஒழுங்காக நடைபெற உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளனர்.

ரஷ்ய நாடாளுமன்றமாகிய டூமாவில் மொத்தம் 450 இடங்கள் உள்ளன.

ஆளும் கட்சி ஆகிய யுனைடெட் ரசியா மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ஆளும் கட்சியிடம் உள்ளன. இந்த முறை எதிர்க்கட்சிகள் ஆளும் கடசியியின் பலத்தை குறைக்குமா என்று தெரியவில்லை.