ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் நடைமுறை தற்காலிக நிறுத்தம்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 16:07

வாஷிங்டன், செப்டம்பர் 17

உலக சுகாதார நிறுவனத்தின் கிளை அமைப்பான பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன்,  ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரானா தடுப்பூசி மருந்துக்கு அவசர மருந்தாகப் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக இன்று அறிவித்தது.

ரசியா தடுப்பூசி மருந்து கண்டு பிடித்ததும் அவசர மருந்தாக பயன்படுத்த அனுமதிக்கும்படி உலக சுகாதார நிறுவனத்திடமும் ஐரோப்பிய மருத்துவ ஏஜென்சியிடமும் கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பம் செய்தது.

அதைத்தொடர்ந்து மே மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு ரஷ்யாவில் கொரானா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆய்வுகள் நடத்தியது.

தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலை சிறந்த உற்பத்தி நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று தெரியவந்தது அதுதவிர உற்பத்தி நடைமுறையின் போது தடுப்பூசி மருந்து பிற தொற்றுக்கள் கலக்க வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தொழிற்சாலைகளின் பதில் விளக்கம் தருவதாக அமையவில்லை அதன் காரணமாக தடுப்பூசி மருந்தாக நெருக்கடி காலத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் நடைமுறையை உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் அமெரிக்க கிளை நிறுவனத்தின் உதவி இயக்குனர் ஜார்பாஸ் பார்போஷா  நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.