மதத் தீவிரவாதத்தின் விளைவுகளை ஆப்கானிஸ்தானில் காணலாம்: பிரதமர் மோடி பேச்சு

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 15:29

புதுடெல்லி, செப்டம்பர் 17,

மத தீவிரவாதத்தின் விளைவுகளை ஆப்கானிஸ்தானத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் தெளிவாக உலகுக்கு உணர்த்துவதாக  ஷாங்காய் கோஆப்பரேஷன் ஆர்கனைசேஷன் நாடுகளின் 21வது தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஷாங்காய் கோஆப்பரேஷன் ஆர்கனைசேஷன் நாடுகளின் 21வது தலைவர்கள் மாநாடு தாஜிக்ஸ்தான் தலைநகரான துஷான்பேயில் நடக்கிறது.

மாநாட்டுக்காக கூடியுள்ள தலைவர்கள் மத்தியில் காணொலிக் காட்சி மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தீவிரவாதத்தை எதிர்த்து நடக்கும் போராட்டம் மிக முக்கியமானதாகும் ஏனெனில்

ஷாங்காய் கோஆப்பரேஷன் ஆர்கனைசேஷன் இணைப்பில் உள்ள உறுப்பினர் நாடுகள் இடையே பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியமானதாகும் இந்த பகுதியில் மிகப் பெரிய சவாலாக விளங்குவது அமைதி ,பாதுகாப்பு, நம்பிக்கையின்மை ஆகியவைகள் ஆகும். இந்த இந்த சவால்களுக்கு பின்னணியில் அமைந்திருப்பது வளர்ந்து வரும் மத தீவிரவாதம் ஆகும் ஆப்கானிஸ்தானத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் மத தீவிரவாதத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

சாங்காய் கூப்பரேஷன் ஆர்கனிஷயேசன் இதனை எதிர்த்து போராட முன்முயற்சி எடுக்கவேண்டும்.

துஷான்பேயில்  நடக்கும் மாநாட்டில் ஈரான் புதிய உறுப்பினர் நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டது. ஈரான் நாட்டை உறுப்பினராக இணைத்துக் கொண்டதை வரவேற்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார் சவுதி அரேபியா எகிப்து கத்தார் ஆகிய நாடுகளை விவாத உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டிருப்பதையும் மோடி பாராட்டினார்.

மத்திய ஆசியப் பகுதியில் அனைவருக்கும் இணக்கமாக இஸ்லாம் விளங்கியது.

எனவே எஸ்சிஓ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் தீவிரவாதத்தையும் மத தீவிரவாதத்தையும் எதிர்த்து போராட வேண்டும்.

சுபி அமைப்புமுறை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் விளங்கி வந்தது.

மத்த தீவிரவாதத்தையும் மத தீவிரவாத  அடிப்படையிலான ஆட்சி முறையினையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டத்தை எஸ்சிஓ  உருவாக்க வேண்டும். டாஸ்கண்டு நகரைத் தலைமையிடமாகக் கொண்ட

பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பினை எஸ்சிஓ உருவாக்கி இருப்பது பாராட்டுதற்குரியது.

எஸ்சிஓ உச்சி மாநாட்டினை தாஜிகிஸ்தான் நாட்டையும் அதன் மக்கள் அனைவரையும் பாராட்டுவதாக மோடி தெரிவித்தார்.

சபாகர் துறைமுகத்திலும் சர்வதேச நார்த் சவுத் தாழ்வாரத்தில் இந்தியா முதலீடு செய்திருப்பது இப்பகுதியில் இணைப்புக்கு இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை காட்டுவதாக மோடி தெரிவித்தார் கடல் தொடர்பு இல்லாத மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவுடன் தொடர்பு பராமரிப்பது வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வதற்கு உதவும் இந்தியாவே ஒரு பெரிய மார்க்கெட் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.