தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் - தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மலர்மாலை மரியாதை

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 13:52

சென்னை

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பெரியார் உருவச் சிலைகளுக்கும், புகைப்படங்களுக்கும்  அதிமுகவினர் இன்று மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மதுரை மாவட்டம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தினர் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில், திருமங்கலம் நகரில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை கடைப் பிடிப்போம் என தொண்டர்கள் முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உட்பட மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு,

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றனர்.

சேலம் மாவட்டம்

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் உட்பட மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்

பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்டக் கழகத்தினர் மரியாதை செலுத்தினர்.

மாவட்டக் கழக செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்க திரளாக கலந்துகொண்டு தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, அஇஅதிமுக இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன் மரியாதை செலுத்தினார்.