மும்பை பந்தாராவில் ப்ளை ஓவர் அமைக்கும் பொழுது விபத்து: 14 தொழிலாளர்கள் காயம்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 13:03

மும்பை, செப்டம்பர் 17,

மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள பந்தாரா குர்லா வளாகத்தில் புதிதாக ப்ளை ஓவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணியின்போது நீண்ட இரும்பு கர்டர் ஒன்று நழுவி விழுந்தது.

இந்த விபத்து காரணமாக  14 தொழிலாளர்கள் காயமடைந்தனர். ப்ளை ஓவர்கட்டும் பணி தாமதப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4.41 மணிக்கு இந்த விபத்து நடந்தது. காயம் அடைந்த தொழிலாளர்கள் அனைவரும் வி.என். தேசாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.