வங்கிகளின் வராக்கடன் பிரச்சினைக்குத் தீர்வுகாண பேட் வங்கி அமைக்க மத்திய அரசு முடிவு

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 12:36

புதுடெல்லி, செப்டம்பர் 17,

வங்கிகளின் வராக்கடன் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண உதவும் "பேட் வங்கி", ஒன்றை அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வங்கி ரூபாய் 2 லட்சம் கோடிக்கான வராக்கடன் சொத்துக்களை ஆர்ஜிதம் செய்து அந்த சொத்துக்களின் மதிப்பை வங்கிகள் பெற உதவும். "பேட் வங்கி", வழங்கும் செக்யூரிட்டி ரிசிப்டுகளுக்கு ஐந்தாண்டு காலத்துக்கு ரூ.30600 கோடிக்கு மத்திய அரசு காப்பீட்டு வழங்குவது என்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது இந்த தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

வங்கிகள் வசம் உள்ள வராக்கடன் சொத்துக்களை லீட் வங்கி மூலமாக வாங்குவதற்கு என்ன தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனி லிமிடெட் ஒன்றுக்கு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்திய ரிசர்வ் வங்கி இப்பொழுது ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே 90 ஆயிரம் கோடிக்கான வராக்கடன் சொத்துக்களை தேசியச் சொத்து சீரமைப்பு கம்பெனி கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சொத்துக்கள் அனைத்தும் தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனியில் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.

தனியார் வங்கிகளும் அரசு வங்கிகளும் இணைந்து இந்திய கடன் தீர்வு கம்பெனி ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக வாராக்கடன் சொத்துக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் என்று நம்பப்படுகிறது.

வராக்கடன் சொத்துக்களின் மதிப்பில் 15 சதவீத அளவுக்கு வீடு வங்கி மூலமாக வங்கிகளுக்கு தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனி நோக்கம் வழங்கும் மீதமுள்ள 85 சதவீதத்திற்கு தேசியச் சொத்து சீரமைப்பு கம்பெனி செக்யூரிட்டி ரசீதுகளை வழங்கும்.

இந்த செக்யூரிட்டி ரசீதுகளுக்கு 5 ஆண்டு காலத்துக்கு காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் காப்பீடு காரணமாக காப்பீடு இல்லாத சொத்துக்களின் மதிப்பு சரிவதை தடுக்க இயலும். மத்திய அரசின் ஐந்தாண்டு கால காப்பீடு பின் சரிவு தடுப்பு அமைப்பாக செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனியில் பொதுத்துறை வங்கிகள் 51 சதவீத அளவுக்கு முதலீடு செய்யும். மீதமுள்ள 49 சதவீதத்தை பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமான இந்த அமைப்பு வங்கிகளின் வராக்கடன் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.