இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் குறித்து சீனா எழுப்பும் கேள்வி

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 12:32

பெய்ஜிங், செப்டம்பர் 17,

5000 கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் பெற்ற அக்கினி 5 ஏவுகணை திட்ட சோதனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு விரோதமானது என்று சீன வெளியுறவுத் துறை பேச்சாளர் ஜாவோ லிஜியான் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்டம்பர் 16ஆம் தேதி வியாழக்கிழமை என்று சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜார்ஜியா செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் தந்தார்.

இந்தியா சோதனை செய்துபார்க்க உள்ள அக்னி-5 ஏவுகணை அணு ஆயுத ஆயுதங்களைச் சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை வீசி தாக்கும் திறன் உடையது என்று கூறப்படுகிறது 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை கூட அக்னி-5 ஏவுகணை தாக்கியதாக இருக்கும் என இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவின் அறிவிப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நாட்டில் உள்ள எல்லா நகரங்களையும் இந்தியா தாக்கும் திறன் உள்ளதாக அமையும் என்று கூறப்படுகிறது இந்தியாவின் நடவடிக்கை முறையானது தானா சீன அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் அவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜாவோ லிஜியான் பதிலளித்தார்.

1998 ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுத சோதனை நடத்திய போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கட்டுப்படுத்தும் 1172 என்ற எண் உள்ள தீர்மானம் ஒன்றை வெளியிட்டது.

அந்த தீர்மானப்படி இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கூடாது.

அணுஆயுதங்களை குறிப்பிட்ட இலக்கை குறிவைத்து தாக்கக் கூடிய ஏவுகணைகளை உற்பத்தி செய்யவும் மற்ற நாடுகளுக்கு விநியோகம் செய்யவும் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் வலியுறுத்துகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா அணு ஆயுதங்களை குறிப்பிட்ட இலக்கை நோக்கி செலுத்தக் கூடிய ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜாவோ லிஜியான் பதிலளித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது என்பதை அவர் மறைத்துவிட்டார். பாகிஸ்தான் ஏவுகணை சோதனை உதவக்கூடிய ஆப்டிகல் கருவித்

தொகுப்பை சீனா விலைக்குவிற்று உள்ளது. அந்த கருவி தொகுப்பை பாகிஸ்தான் தன்னுடைய ஏவுகணை சோதனை மையம் ஒன்றில் நிறுவியுள்ளது என்று ஆய்வாளர் ஒருவரது அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.