எல்லையில் இன்றைய நிலை தொடரக்கூடாது: இந்திய - சீன வெளியுறவு அமைச்சர்கள் ஒருமித்த கருத்து

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 11:08

துஷான்பே (தாஜிக்ஸ்தான்), செப்டம்பர் 17,

ஷாங்காய் கோஆபரேஷன் அமைப்பின் உச்சிமாநாட்டுக்காக தாஜிக்ஸ்தான் தலைநகரம் துஷான்பே வுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்  யியும் சென்றுள்ளனர்.

மாநாட்டு அரங்குக்கு வெளியே இந்திய வெளியுறவு அமைச்சர் ஷங்கரும் சீன வெளியுறவு அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்பொழுது இந்திய -  சீன எல்லையில் லடாக் பகுதியில் உள்ள நிலைமை குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர்.

லடாக் எல்லைப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உள்ளது. இந்திய-சீன உறவு இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

லடாக் பகுதியில் இன்று நிலவும் சூழ்நிலை தொடருவது தரப்பின் உறவு மேம்பட உதவாது என்பதே இது நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உறுதி செய்தனர்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டியது அவசியம் அதற்காக ராணுவ அதிகாரிகள் தூதரக அதிகாரிகள் மேலும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி படை விளக்கம் குறித்து சாதகமான முடிவு எட்டப்பட வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்திய சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை பற்றிய விவரங்கள் அடங்கிய இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கை வெள்ளிக்கிழமை அன்று காலை வெளியிடப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சக  அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.