தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று பாதிப்பு 1,693 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது - 25 பேர் உயிரிழப்பு

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2021 19:27

சென்னை

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று பாதிப்பு 1,693 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  26,40,361 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் பாதிப்பால் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களில் தமிழ்நாட்டில் பதிவான கொரோனா தொற்றின் எண்ணிக்கை வித்தியாசம்  14 / 9/ 2021  -  1,591,   15 / 9/ 2021  -  1,658,    16 / 9/ 2021  - 1,693

சென்னையின் 15 மண்டலங்களில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு 202 பேருக்கு இன்று கண்டறியப்பட்டுள்ளது

கோவை மாநகரில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு  206 பேருக்கு இன்று கண்டறியப்பட்டுள்ளது

ஈரோட்டில்  கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு 134 பேருக்கு இன்று கண்டறியப்பட்டுள்ளது

என தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு இன்று 1,693 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,40,361ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள்  16,756 பேர்


சென்னையில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று பாதிப்பு  202 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை  5,47,076 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கோவிட்-19 க்காக 1,864 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இன்று  25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  35,271 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று 1,53,205 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான (RT-PCR) பரிசோதனை இதுவரை 4,39,30,427 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று 1,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 25,88,334 பேர் குணமடைந்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.02% பேர் மருத்துவச் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19  பரிசோதனை நிலையங்கள் 298 (69 அரசு + 229 தனியார்).

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து  இன்று தமிழகம் வந்த  ஒருவருக்கு  கோவிட்-19 தொற்று பாதிப்பு மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் விவரம் (16.09.2021) மாவட்ட வாரியாக கீழே தரப்பட்டுள்ளது.