பிரதமர் மோடி தலைமையில் புதிய மத்திய அமைச்சர்களுக்கு ஐந்தரை மணி நேரம் பயிற்சி கருத்தரங்கம்

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2021 13:41

புதுடெல்லி, செப்டம்பர் 15,

மத்திய அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 37 அமைச்சர்களுக்கு பல்வேறு செய்திகள் தொடர்பாக பயிற்சி அளிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஐந்தரை மணிநேரம் பயிற்சி கருத்தரங்கம் செவ்வாயன்று நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் தேவைப்படும் பொழுதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை பெறு கிறார்கள். அப்பொழுது குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து பிரதமருக்கு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்வது வழக்கம்.

மத்திய அமைச்சரவையில் புதிதாக 37 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

முதன்முறையாக அமைச்சராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளன அவர்களில் பலர் நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது எனவே அவர்களுக்கு பயிற்சியளித்தல் என்ற முறையில் ஐந்தரை மணி நேரம் கருத்தரங்கு நடைபெற்றது.

பயிற்சி கருத்தரங்குக்கு தலைமை வகித்த பிரதமர் நரேந்திர மோடி பேசும்பொழுது மறைந்த பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டார் மனோகர் பரிக்கர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டவர் ஆனால் அவர் சிந்தனைகள் அனைத்தும் உயர்நிலையில் இருப்பது வழக்கம் என்று மோடி குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபொழுது மாநில அமைச்சர்கள் அனைவரும் காலை சிற்றுண்டி மாலை சிற்றுண்டி நேரத்தில் சந்தித்து பேசுவது வழக்கம் அப்போது அமைச்சர்கள் எல்லோரும் தங்களுடைய சிற்றுண்டியை தாங்களே கொண்டு வருவார்கள் மற்ற அமைச்சர்கள் கொண்டு வருவதை அவர்கள் பகிர்ந்து கொள்வதும் உண்டு இந்த நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமைச்சர்களுடன் அடிப்படையான விஷயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம் என்று நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த அமைச்சரவையின் செயல்திறனை மேம்படுத்தும் திறனையும் அதிகரிக்க உதவும் என்று மோடி குறிப்பிட்டார்.

இந்த பயிற்சி கருத்தரங்கில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாந்தவியா  மற்றும் தர்மேந்திர பிரதான் செயல்திறன் மற்றும் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி என்று விளக்கமாக பேசினார்கள்.

தங்களுடைய சொத்து ஊழியர்களைத் தேர்வு செய்வது எப்படி அது கவனமாக அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்று இது அமைத்து மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகள் குறித்தும் தன்னை பார்க்க வரும் பொதுமக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்றும் அமைச்சர்கள் விளக்கினார்கள் அவருக்கு வரும் கடிதங்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.

கருத்தை புதிய அமைச்சர்களுக்கு விளக்கும் வகையில் அவர்கள் பிரசன்டேஷன் நடைமுறையை பின்பற்றினார்கள்.

புதிய அமைச்சர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நான்கு கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இந்த 4 கருத்தரங்குகளில் முதல் கருத்தரங்கம் செவ்வாயன்று நடைபெற்றது என்று கட்சி வட்டாரங்கள் கூறின.