டிரிப்யுனல் காலியிடங்களை 2 வாரத்தில் நிரப்ப மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2021 13:17

புதுடெல்லி, செப்டம்பர் 15,

முக்கியமான  டிரிப்யுனல் மற்றும் மேல்முறையீட்டு டிரிப்யுனல்களில் 250 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை இரண்டு வார காலத்தில் நிரப்பும் படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி அடங்கிய அமர்வு புதன்கிழமையன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

முக்கியமான  டிரிப்யுனல் மற்றும் மேல்முறையீட்டு டிரிப்யுனல்கள் நீதிமன்ற அதிகாரங்களை கொண்டவை.

இவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் தொழில்நுட்ப உறுப்பினர்கள் பதவி இடங்கள் காலியாக விடப்பட்ட இவற்றில் மனு செய்து தீர்ப்புக்காக காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். அதனால் இந்தப் பிரச்சனையில் முடிவு கூறாமல் காலம் கடத்த முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

டிரிப்யுனல் மற்றும் மேல்முறையீட்டு டிரிப்யுனல்களில் காலியாக உள்ள தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் இடங்களுக்கு பொறுப்பானவர்களை தேர்வு செய்வதற்கு என்று தேர்வுக் குழு நியமிக்கப்பட்டு அவை உங்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளன. அதன்பிறகும் 250க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பாமல் விடுவதை அனுமதிக்க இயலாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவிற்கு இணங்க அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

முக்கியமான  டிரிப்யுனல் மற்றும் மேல்முறையீட்டு டிரிப்யுனல்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் இப்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்த பிறகு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.