இந்திய பிரிட்டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு நவம்பர் 1ல் துவக்கம்: இந்தியா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 21:11

புதுடெல்லி, செப்டம்பர் 14,

இந்திய பிரிட்டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் துவங்கும் என்று இந்திய தொழில் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் செவ்வாயன்று செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வர்த்தக செயலாளர் எலிசபெத் டிரஸ் திங்கட்கிழமை அன்று புது டெல்லி வந்து சேர்ந்தார். பிரிட்டன் வர்த்தக செயலாளருடன் இந்திய தொழில் வர்த்தக அமைச்சர் கோயில் திங்கட்கிழமை பேச்சு நடத்தினார்.

இந்தியா பிரிட்டன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரம் அடங்கிய செய்திக்குறிப்பு இந்திய தொழில் வர்த்தக அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டது அதில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்திய பிரிட்டன் சுதந்திர வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையை வரும் 2022ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முடிக்கவேண்டும் என்று இருதரப்பும் இலக்கு நிர்ணயித்துள்ளன என்றும் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தொழில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் பிரிட்டன் அரசாங்கம் தனியாக செய்தி குறிப்பாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது