செப்டம்பர் 25-ஆம் தேதி ஐநா பொது பேரவை கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி நேரில் பேசுகிறார்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 17:50

புதுடெல்லி, செப்டம்பர் 14,

ஐக்கிய நாடுகள் சபையின் ஆறாவது பேரவைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 25ஆம் தேதி நேரில் பேசுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் நடைபெறும் குவாத் அமைப்பின் கூட்டத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி இந்திய பிரதமர் பங்கேற்க வாஷிங்டன் நகருக்கு செல்கிறார். குவாத்

அமைப்பின் கூட்டம் முடிந்ததும் நியூயார்க் நகருக்கு விமானம் மூலம் செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 25ஆம் தேதி 25 பேரவை கூட்டத்தில் நேரில் தலைவர்கள் மத்தியில் பேசுகிறார்.

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மரபுப்படி முதல் நாடாக பிரேசில் சொற்பொழிவாற்றும்

இரண்டாவது நாடாக அமெரிக்கா பேசுவது வழக்கம் அந்த மரபுப்படி இந்த முறையும் அமெரிக்க அதிபர் இரண்டாவது பேச்சாளராக பொதுப்பேரவை கூட்டத்தில் நேரில் பேசுகிறார்.

இந்த முறை கடைசி பேச்சாளராக ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதிநிதி குலாம் இசாக்ஜாய் பேசுகிறார். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இருந்தபொழுது ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்

குலாம் இசாக்ஜாய் .

இக்காலத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தலிபான் அரசு குலாம் இசாக்ஜாய் நியமனம் குறித்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.