அரசுப்பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30லிருந்து 40% ஆக உயர்வு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2021 21:08

மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசுப்பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு  30லிருந்து 40% ஆக உயர்வு

சென்னை, செப்டம்பர் 13,

அரசுப்பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆக உயர்த்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்

தமிழக சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.


அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் கூறியதாவது:-

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். போட்டித்தேர்வுகள் தாமதம் ஆனதால், நேரடி நியமனங்களில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்படும்.

தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் ஆக்கப்படும்” என்று மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்..