கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2021 12:28

சென்னை, செப்டம்பர் 13,

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 13 – திங்களன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டார்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் . உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது.அவற்றின் அடிப்படையில் யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் கூறினார்.

இந்த அறிவிப்பு மூலம் ரூபாய் 6000 கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடிசெய்யப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று அறிவித்தார்.