பாஞ்ச்ஷிர் எதிர்ப்பு இயக்கத் தலைவர்கள் வெளிநாட்டுக்கு ஓடவில்லை: ஈரான் செய்தி ஏஜென்சி தகவல்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2021 17:50

தெஹ்ரான், செப்டம்பர் 12,

ஆப்கானிஸ்தானத்தில் பாஞ்ச்ஷிர் மாநிலத்தில் இருந்து தேசிய எதிர்ப்பு முன்னணி தலைவர்கள் அகமது மசூத் மற்றும் அம்ருல்லா சாலே ஆகிய இருவரும் துருக்கி நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக ஆப்கானிஸ்தானத்தில் செய்திகள்வெளியாகியுள்ளன

செய்திகள் உண்மை அல்ல என்று ஈரானிய செய்தி நிறுவனம் ஆகிய ஃபார்ஸ் அறிவித்துள்ளது.

ரஷ்யாவை எதிர்த்து போரிட்ட வரும் தலிபான்களால் ரூபமாக கொலை செய்யப்பட்ட வரும் ஆன அகமது ஷா மசூத் தின் முதல்வரும் அவரது அரசியல் வாரிசு ஆன அகமது மசூத் தலிபான்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார் சென்ற வாரம் கூட தலிபான்களை எதிர்த்து போராடும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் இருந்தபொழுது உதவி அதிபராக இருந்தவர் அமருல்லா பாலே. ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டில் இல்லாத பொழுது நடத்த வேண்டிய பொறுப்பு உதவி அதிபர் உடையது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது .எனவே ஆப்கானிஸ்தான் அரசு நிர்வகிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறேன் என்று அறிவித்தவர் அம்ருல்லா சாலே.

தாலிபான் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இருவரும் துருக்கி நாட்டுக்கு ஓடிவிட்டார்கள் என்று கூறப்பட்டது இது உண்மை அல்ல என்று ஈரான் நாட்டு செய்தி ஏஜென்சி கூறுகிறது.

பார் செய்தி ஏஜென்சி அளித்த பேட்டியின்போது தாங்கள் இருவரும் பாஞ்ச்ஷிர் மாநிலத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் நகரங்களில் 70 சதவீத தெருக்களை தலிபான்கள் கைப்பற்றியது உண்மைதான் ஆனால் நான் உங்களை விட்டு எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த வீரர்கள் பள்ளத்தாக்கில் மலைப் பகுதிகளுக்கு சென்று உள்ளனர் அவர்கள் அங்கிருந்து போரிட்டு வருகிறார்கள் என்று இருவரும் தெரிவித்தனர்.

தலிபான் படை முன்னேறிய பொழுது எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் மலைப்பகுதிக்கு தப்பி ஓடிவிட்டார்கள் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு தலிபான் அரசு முயற்சி செய்து வருகிறது என்று கலிபா இயக்கத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறியது அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இயக்கத்தைச் சேர்ந்த மலைகளிலும் குகைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஒளிந்து கொண்டு இருக்கிறார் அவர்கள் மக்கள் மத்தியில் தோன்றவில்லை என்று தலிபான்கள் கலாசார கமிஷன் உறுப்பினர்  அனாமுல்லா சமன்கானி கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாஞ்ச்ஷிர் மின் வினியோகம் இன்னும் துவங்கவில்லை.

சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள் மருந்து வகைகளும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று செய்தி ஏஜென்சிகள் கூறுகின்றன.