அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான்

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2021 14:44

சென்னை

மதங்களைக் கடந்து மனிதர்களை கொண்டாடுபவர்களை வாழ்த்துவோம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் - என திமுக அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் அக்கவுண்ட்டை தொடங்கினார். பல்வேறு பதிவுகளை அடுத்தடுத்து வந்த விநாயகர் சதுர்த்திக்கும் முகநூல் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

கலைஞரின் அறிவுரையால் அதன்பிறகு அப்படிப்பட்ட வாழ்த்து செய்திகள் வரவில்லை.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஒரு அமைச்சர், இஸ்லாமிய சமூகத்தை மஸ்தான். உன் மதமா, என் மதமா. ஆண்டவன் எந்த மதம் என்று பாடலால் பகுத்தறிவூட்டிய நாகூர் அனிபா தான் நினைவுக்கு வருகிறார்.

அகவல்கள் பாடி, கொழுக்கட்டைகள் செய்து விநாயகரை கொண்டாடுகிறோமோ இல்லையோ மதங்களைக் கடந்து மனிதர்களை கொண்டாடுபவர்களை வாழ்த்துவோம்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

இவ்வாறு  அமைச்சர்  மஸ்தான் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.