டெல்லியில் மாருதி கார்கள் விலை உயர்வு

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2021 19:22

புது டெல்லி, செப்டம்பர் 6,

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இந்தியாவில் முதல் நிலை கார் உற்பத்தியாளர் ஆன மாருதி உத்யோக் நிறுவனம் தனது கார்களின் விலையை திங்கட்கிழமை (6-9-2021) முதல் உயர்த்தியது.

கார் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளன இந்த நிலையில் விலையை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று மாருதி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு உயர் அதிகாரி தெரிவித்தார்.

திங்கட்கிழமை அன்று டெல்லியில் உள்ள மாருதி ஷோரூம் களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் கார்களின் விலை 1.9 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மொத்த நகரங்களில் நேற்று முதல் அமலுக்கு வரும் என்று மாருதி அறிவிக்கவில்லை.

இருபத்தி ஒன்றாம் ஆண்டு இதுவரை மூன்று முறை தனது கார்களின் விலையை மாருதி நிறுவனம் உயர்த்தியுள்ளது.