சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆகஸ்ட் 15ஆம் தேதி திறப்பு: ஆன்லைனில் தரிசனத்துக்கு பதிவு

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2021 10:51

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 10,

ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறக்கப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அய்யப்பன் கோவில்  நடை திறக்கப்படும். தீபாராதனைக்குப் பிறகு இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். தொடர்ந்து பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறும். 

21ஆம் தேதி வரை ஆவணி மாத பூஜை ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறும்.

பக்தர்கள் தரிசனம்

மாதம் 16ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் அனுமதி வழங்கப்படுகிறது தினந்தோறும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசியல் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்ட அதற்கான சான்றிதழ் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வசம் இருக்க வேண்டும் இந்த சான்றிதழ்கள் இல்லாதவர்கள் முன்பதிவு முறையாக செய்திருந்த போதிலும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது இவ்வாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.