இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,26,789 ஆக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 08 ஏப்ரல் 2021 10:50

புதுடெல்லி

இந்தியா முழுவதும் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 685 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா வைரஸ்  பரவல் கட்டுக்குள் வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே  29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது. (கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கையிலிருந்து உயர்வு  1,26,789 பேர்)

கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பால் நேற்று 685 பேர் உயிரிழந்தனர், கொரோனா பாதிப்பால்  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,862ஆக உயர்ந்து உள்ளது.   

1 கோடியே  18 லட்சத்து  51 ஆயிரத்து  393 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இதுவரை குணமடைந்து உள்ளனர். (நேற்றிலிருந்து இப்போதைய எண்ணிக்கை உயர்வு 59,258 பேர்).  

9 லட்சத்து  10 ஆயிரத்து 319 பேர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. (நேற்றிலிருந்து இப்போதைய எண்ணிக்கை உயர்வு 66,846  பேர்) 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில்  பிற மாநிலங்களில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவ சிகிச்சையில் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.