வகுப்புவாத அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக புகார்: விளக்கம் கோரி மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 21:25

வகுப்புவாத அடிப்படையில் முஸ்லிம்கள் திரிணாமுல் காங்கிரஸ் வாக்களிக்கவேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் செய்துள்ளது அந்த புகாரின் பேரில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஹுக்ளி நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும்பொழுது மம்தா பானர்ஜி கூறிய கருத்து விவரம்:

சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது இரு கைகூப்பி வேண்டுகோள் ஒன்றை முன் வைக்கிறேன் சாத்தான் இப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பணத்தோடு நம்மை எதிர்த்து தாக்குதல் தொடுத்து இருக்கிறது அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காதீர்கள் சிறுபான்மையின வாக்குகள் பிரிந்து போக அனுமதிக்காதீர்கள். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக தன்னுடைய திரிணாமுல் காங்கிரசுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருக்கிறார் இதுகுறித்து தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தது.

மம்தா பானர்ஜி பேசியதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மம்தா பானர்ஜி பதிலளித்து பேசினார் அப்போது முஸ்லிம் வாக்காளர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பிடிப்பு தளர்ந்து விட்டது மம்தாவின் பேச்சு இதைத்தான் காட்டுகிறது சமீபத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் என்று திடி மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார் இந்த பேச்சு அவர் கையிலிருந்து முஸ்லிம் வாக்குகள் நழுவிக் கொண்டு போகின்றன என்பதைக் காட்டுகிறது.

இந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தால் எல்லோரும் எங்களை விமர்சனம் செய்திருப்பார்கள் எங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் எங்களுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்