மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீது சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு: அனில் தேஷ்முக் ராஜினாமா

பதிவு செய்த நாள் : 05 ஏப்ரல் 2021 15:18

மும்பை

மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ பாட்டீல்  தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீது நடந்த விசாரணையின்போது மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மும்பை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் தெரிவித்த புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சரான அனில் தேஷ்முக் ராஜினாமா கடிதத்தை திங்களன்று மாநில முதல்வருக்கு அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில் தேஷ்முக் கூறிய விபரம்:

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ பாட்டீல் தாக்கல் செய்த மனுவின் மீது சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது இந்நிலையில் நான் தார்மீக ரீதியில் உள்துறை அமைச்சராக பதவியில் நீடிப்பது முறையற்றது என்று கருதுகிறேன் .அதனால் எனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்தேன் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ பாட்டீல் தாக்கல் செய்த மனுவில் மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் தெரிவித்த புகார் பற்றி கூறியிருந்தார்.

பரம்வீர் சிங் மும்பை நகர போலீஸ் கமிஷனர் பொறுப்பிலிருந்து போன் காடு துறைக்கு மாற்றப்பட்டதும் கடிதம் ஒன்றை மாநில அரசுக்கு அனுப்பி இருந்தார் அந்தக் கடிதத்தில் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாஜ் . மக்களிடமிருந்து வசூலித்து ரூபாய் செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தது பரம்வீர் சிங் கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் இன்று சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தது.

மும்பை உயர்நீதிமன்ற ஆணைக்கு இணங்க பதவியை திங்களன்று அனில் தேஷ்முக் ராஜிநாமா செய்தார்.