சாமிதோப்பு, அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம்: முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 03 மார்ச் 2021 19:40

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

சாதி, சமய பேதமின்றி சமத்துவத்தையும், தர்மத்தையும் போதித்த அய்யா வைகுண்டரின் அருள் மொழிகள் அவனி எங்கும் பரவியுள்ளது.

அய்யா வைகுண்டரின் போதனைகளை நாமும் பின்பற்றி அவரது அவதார திருநாள் விழாவில் கலந்துகொண்டு அருள் பெற வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி கீழே தரப்பட்டுள்ளது.