குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலை

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 16:37

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் 6 மாநகராட்சிகளுக்கான மொத்தம் 576 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், தற்போது வரை 389 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 39 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 3 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில், அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் மாநகராட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது. 

6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 

இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் 2 இடங்களுக்காக நடைபெறும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.

 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 263 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

 எதிர்க்கட்சியான காங்கிரஸ் 56 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இதர கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

அகமதாபாத் மாநகராட்சி

குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான அகமதாபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 82 வார்டுகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

அகமதாபாத் நகராட்சியில் மொத்தம் உள்ள 109 இடங்களில் 99 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்கோட் மாநகராட்சி

ராஜ்கோட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 இடங்களில் 68 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது

காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

சூரத் மாநகராட்சி

சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 இடங்களில் 58 பாஜக வெற்றி பெற்றுள்ளது.

வதோதரா மாநகராட்சி

வதோதரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 இடங்களில்  65 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஜாம் நகர், பாவ் நகர்

64 இடங்களைக் கொண்ட ஜாம்நகரில் 50 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

52 இடங்களைக் கொண்ட பவ்நகரில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.