மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த் ராவ் நியமனம்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 14:26

மதுரை:

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த பேராசிரியரான மங்கு ஹனுமந்த ராவ் திருப்பதி எஸ்.வி மெடிக்கல் சயின்ஸ் நிறுவன தலைவராக உள்ளார்.

மத்திய அரசு இன்று, 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை நியமினம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு - மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை,

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை,

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 

ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாக இயக்குனர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.