சென்னை,
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ரன் அடிக்க திணறுகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (13-2-2021) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா அபாராமாக ஆடினார். ஆனால் மறு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். துணை கேப்டன் ரகானே (67 ரன்கள்) ஓரளவு சிறப்பாக ஆடினார்.
ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து இருந்தது.
2- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் அக்சர் படேல் ஆட்டமிழந்தார் . அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. எனினும், அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார்.
ஆனால், 95.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 329- ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி.
ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி பேட்டிங்க்
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் விளையாடுகிறது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது.
உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணி தரப்பில் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது
தொடர்ந்து விளையாடிய இந்நிலையில் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
2வது இன்னிங்ஸ் -
இன்றே 2வது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி.
ரோகித் சர்மா 18 பந்துகளில் 17 ரன்கள் அடித்துள்ளார்.
சுப்மான் கில் 15 பந்துகளில் 10 ரன்கள் அடித்துள்ளார்
இந்திய அணி 6 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்துள்ளது
195 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.