மேஷம்

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்
13.03.2019 முதல் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகி ஒன்பதாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். மனைவி, மக்கள் சுற்றம் என்று உறவுகள் மேன்மையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். காரிய அனுகூலம் தரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும்.
இந்த சூழ்யிலை 10.04.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் காலில் சஞ்சரிப்பார். இதனால் உங்களுக்கு கொடுக்கல் வாங்கலில் சிரமம் வரும். முன் ஜாமீன் யாருக்கும் கொடுக்க வேண்டாம். முன்னெச்ச ரிக்கையுடன் இருங்கள். தேக ஆரோக்யக்குறை, காரியத்தடை, போக்குவரத்தில் முுன்னெச்ச ரிக்கை தேவை என சிரமங்கள் இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு வியாழக்கிழமை தோறும் செய்வது சிரம பரிகாரமாக இருக்கும்.
இந்த நிலை 28.10.2019 வரை நீடிக்கும் அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும தனுசு ராசிக்கு வரும் பொழுது உங்களுக்கு குருவின் நற்பலன்கள் கிட்டும். குடும்பமேன்மை, பொருளாதார முன்னேற்றம் கடன் தீருதல் என பலன்கள் இருக்கும். குருவின் 5,7,9ம் பார்வை ராசிக்கும், 3 ஆமிடத்திற்கும் 5 ஆமிடத்திற்கும் கிடைக்கும். எனவே சுக சவுக்கியம் பெருகும். சிலருக்கு இடமாற்றம் இருக்கும். இளைய சகோதரர் மேன்மை எதிர்பாராத செலவினங்கள் – பூர்வீக சொத்து கிட்டும். புத்திரபாக்யம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்யம் கிட்டும்.
இந்த சூழ்நிலைகள் குருவின் பொதுப்பலன்களாக இருக்கும். மூல நட்சத்திர பாத சஞ்சாரம் பொருளாதார மேன்மை, செல்வம், செல்வாக்கு, புத்திசாலித்தனம் என பலன்கள் 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் குருவின் பூராட நட்சத்திரம் கால் சஞ்சாரம் பணவரவுகள் கூடும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றம் – சுபகாரிய அனுகூலம் – தேக ஆரோக்யம் என நற்பலன்கள் வழங்குவார்.
இந்த சூழ்நிலை 18.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரத்தில் அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம், தொழில் ரீதியான கவுரவம் பாராட்டு, பயண அலைச்சல் – உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை என சூழ்நிலைகள் இருக்கும். இது 26.03.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இதனால் தொழில் சார்ந்த சூழ்நிலையில் கடின உழைப்பு இருக்கும். மனச்சோர்வு, உடல்சோர்வு உண்டாகும். எதிர்பாராத செலவினங்கள் வரும். இந்த சூழ்நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு மீண்டும் தனசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது நற்பலன்கைள வழங்குவார்.
09.07.2020 முதல் குரு உத்திராட சஞ்சாரம் தனுசு ராசியில் 14.12.2020 வரை இருந்து நற்பலன்கள் வழங்குகிறார். சனி, கேதுவின் சிரம் பலன்கள் குருவின் சேர்க்கையயால் குறையும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்சசியாகிறார். நீங்கள் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, செய்வது சிரமப் பரிகாரமாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகள் தரும்.
குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகம். உங்களுக்கு வகர பலன்களும் அதிசார பலன்களும் சாதக மில்லை. ஆனாலும் குருவின் 9ம் இடம் ஸ்தானங்களுக்கு நற்பலன்கள் தருவார். உங்களுக்கு வியாழக்
கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு பலன்களை தரும்.
ரிஷபம்

கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம்
13.03.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகி எட்டாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது எட்டாமிட சிரம பலன்கள் இருக்கும். ஆனாலும், குருவின் சேர்க்கை அந்த சிரமங்களை குறைக்கும். பணச்சிரமம், சேமிப்பு கரைதல் – தேக ஆரோக்யக்குறை, காரியத்தடை போக்குவரத்தில் முன்னெச்ச ரிக்கை தேவைப்படும். மனக்குழப்பம் என பொதுப்பலன்களாக இந்த குருப்பெயர்ச்சியில் இருக்கும். அதேபோல் குருவின் 5,7,9ம் பார்வை 12ம் இடத்திற்கும், 2ம் இடத்திற்கும், 4ம் இடத்திற்கும் இருப்பதால் – சுபச்செலவுகள், தனவிரயம் ஏற்படும். சுகபோஜனம் – சுகஜீவனம், பொருளாதார மேன்மை, பணவரவு, கல்வியில் முன்னேற்றம், தனவிருத்தி என பார்வை பலன்கள் இருக்கும். இது ஆண்டு முழுவதும் நீடிக்கும் குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.3.3019 முதல் எதிர்பாராத செலவுகள் வரும். திட்டங்கள் சிறப்பாக இருந்தாலும் அதன் செயல்பாடுகளில் சிரமங்கள் கடின உழைப்பு என இருக்கும். கொடுக்கல் வாங்கலில் புத்திசாலித்தனம் முன்னெச்ச ரிக்கை தேவைப்படும். கற்பக விநாயகர் வழிவாடு இந்த சிரமங்களுக்கு பரிகாரமாக அமையும்.குருவின் மூல நட்சத்திர சஞ்சாரம் 10.04.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். கடின உழைப்பு, வீண் விவகாரம், பயண அலைச்சல், எதிர்பாராத செலவினங்கள் என்று சிரமங்கள் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். சுபகாரிய அனுகூலம் என இருக்கும். இந்த வக்ரபெயர்ச்சி பலன்கள் 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனசு ராசிக்கு வரும் பொழுது உங்களுக்கு குருவின் பலன்கள் புத்திசாலித்தனமான செயல்பாடு – கடின உழைப்பு, பயண அலைச்சல், மனக்கவலை, உடல் சோர்வு, மனச்சோர்வு என சிரமங்கள் இருந்தாலும் பக்தி பெருக்கு – இறையருள் – பணவரவு, என சுப பலன்களும் இருக்கும். இந்த சூழ்நிலை 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம், சுபாரிய முன்னேற்றம், என சுப பலன்களைக் கொடுத்தாலும், தேக ஆரோக்யக்குறை போக்குவரத்தில் முன்னெச்ச ரிக்கை தேவைப்படும். எனவே பதட்டப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது உத்தமம். இந்த சூழ்நிலை 18.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உஷ்ணம் சார்ந்த தேக உபாதை, முன் கோபம், டென்ஷன் என சூழ்நிலைகள் சிரமப்படுத்தும். பொருளாதரா சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும்.
இந்த சூழ்நிலை 26.03.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செய்கிறார். இதனால் உங்களுக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். சுபகாரிய அனு கூலமாகும். இந்த சூழ்நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் சிரம பலன்களை கொடுப்பார். 9.7.2020 முதல் குரு உத்திராட நட்சத்திர முதல் பாத சஞ்சாரம் செய்யும் பொழுது தனுசு ராசியில் 14.12.2020 வரை இருந்து சிரமங்களை கொடுத்தாலும் பொதுப் பலனாக நற்பலன்களையும் வழங்குவார். சனி, கேதுவின் சிரம பலன்கள் – குருவின் சேர்க்கையால் குறையும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்ச்சயிாகிறார். நீங்கள் விநாயகர் வழிபாடு துர்க்கை யம்மன் வழிபாடு, பெருமாள் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குரு பெயர்ச்சி எட்டாமிடம் என்பதால உங்களுக்கு சிரமம்.
மிதுனம்

மிருகசீரிஷம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம்
13.03.2019 முதல் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகி ஏழாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது சேர்க்கை குடும்ப ஸ்தானத்தில் சிரமங்களை கொடுத்தாலும் குருவின் ஏழாமிட சஞ்சாரம் சேர்க்கை அந்த சிரமங்களை குறைக்கும். சுபகாரியவிருத்தி,குடும்பமேன்மை, தன தான்ய விருத்தி, குடும்ப மகிழ்ச்சி, திருமணமாக தவர்களுக்கு – வியாழ நோக்கு – திருமண வாய்ப்பு வரும். அதே போல் குருவின் 5,7,9ம் பார்வைகள் 11ம் இடம், ராசி, 3ம் இடம் பார்வை பதிவதால் தனலாபம், பதவி உயர்வு, சுகபோகம், சுக சவுக்யம் பெருகுதல், இடமாற்றம் இளைய சகோதரர் மேன்மை, எதிர்பாராத செலவினங்கள், தன விரயம் என பார்வை பலன்கள் இருக்கும். மேற்படி பொதுப்பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும்.
குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.03.3019 முதல் எதிர்பாராத பணவரவு சுபகாரிய ஈடுபாடு, ஆன்மிக ஈடுபாடு, சுகசவுக்யம், உறவுகள் மேன்மை, தேக ஆரோக்யம் என சுபபலன்கள் குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்களாக 10.04.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதனால் பணச்சிரமம் – கடன் வாங்குதல் வாழ்க்கை துணை நலம் – வழி சங்கடம், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் என சிரமங்கள் இருக்கும். இந்த வக்ர பெயர்ச்சி பலன்கள் 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு குரு வரும்பொழுது உங்களுக்கு குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் மீண்டும் தொடரும். சுபகாரிய ஈடுபாடு, ஆன்மிக ஈடுபாடு, சுகசவுக்கியம், உறவுகள் மேன்மை, பணவரவு, கடன் தீருதல், என சுப பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களு க்கு பொருளாதா முன்னேற்றம்
சுபச்செலவினங்கள், சுகபோகம் பணவரவுகள், தனதான்ய விருத்தி என நற்பலன்ள் கொடுப்பார். எனவே சூழ்நிலையை அனுசரித்து சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
இந்த சூழ்நிலை 18.2.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது, உங்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றம், கவுரவம், அரசு சார்ந்த விஷயம் அனுகூலம், குடும்பத் தேவைகள் பூர்த்தியாகுதல் – உஷ்ணம் சார்ந்த தேக ஆரோக்யக்குறை என பலன்கள் இருந்தாலும் பொருளாதார சூழ்நிலை கள் தாராளமாக இருக்கும். இந்த சூழ்நிலை 26.3.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத சிரமங்கள் வரும். பண நெருக்கடி வரும், வீண் விஷயங்கள், காரியத்தடை, ஜாமீன் கொடுத்த வகையில் சிக்கல், போக்குவரத்தில் சிரமம் என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து இந்த காலகட்டத்தில் திட்டமிட்டு செயல்படுங்கள்.
இந்த சூழ்நிலை 8.7.2020 வரை நீடிக்கும்.
அதன் பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் நற்பலன்களை வழங்குவார். 9.7.2020 முதல் குரு உத்திராட நட்சத்திர சஞ்சார பலன்கள் தொழில் ரீதியான மேன்மை, கவுரவம், அரசு வழி நன்மை, குடும்பத் தேவைகள் பூர்த்தியா குதல், உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை, முன்கோபம் மனசோர்வு என பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். குருவின் சேர்க்கை சனி கேதுவின் சிரமப்ப லன்கள் குறையும், பொதுப்பலன்கள் நற்பலன்களாக இருக்கும். பார்வைப் பலன்கள் உத்தமமாக இருக்கும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார். நீங்கள் விநாயகர் வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு, பெருமாள் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும். குருப்பெயர்ச்சி உங்களுக்கு உத்தமம்.
கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
13.03.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகி ஆறாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது ஆறாமிட சஞ்சார பலன்கள் நற்பலன்களாக இருந்தாலும் குருவின் ஆறாமிட சஞ்சார பலன்கள் சிரமத்தை கொடுக்கும். குடும்பத்தில் வீண் பிரச்னை, பணச் சிக்கல், கடன் வாங்குதல், தேக ஆரோக்யக்குறை என சிரம பலன்கள் பொது பலன்களாக ஆண்டு முழுவதும் இருக்கும். அதே போல் குருவின் 5,7,9ம் பார்வைகள் 10ம் இடம், 12ம் இடம், ராசிக்கு 2ம் இடம் என குரு பார்வை இருப்பதால் செய்யும் தொழிலில் பிரச்னை, கடின உழைப்பு, பணிச்சுமை என சிரமங்கள் இருக்கும். தன விரயம், தேக ஆசூராக்யக்குறை, சுபச் செலவினங்கள், தனவிருத்தி, சுகஜீவனம், சுக போஜனம், பேச்சு சாதுர்யம் என பார்வை பலன்கள் இருக்கும். இது ஆண்டு முழுவதும் நீடிக்கு ம். குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.3.2019 முதல் உங்களுக்கு எதிர்பாராத பணவரவு, ஆன்மிக ஈடுபாடு, கடன் வாங்குதல் , எதிர்பாராத ரிப்பேர் செலவினங்கள், குடும்பத்
தில் வீண் வாக்குவாதம் என இருக்கும். பயண அலைச்சல் சிரமம் தரும். விநாயகர் வழிபாடு இந்த சிரமங்களுக்கு பாரிகாரமாக இருக்கும்.
குருவின் மூல நட்சத்திர சஞ்சாரம் 10.4.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். இது உங்களுக்கு தனலாபம் பெருகுதல், திருமணம், புத்திர பாக்யம், செல்வாக்கு பெருகுதல், பூர்விக சொத்துக்கள் வகையில் லாபம் என நற்பலன்கள் வக்ர பலன்களாக இருக்கும். இந்த சூழ்நிலை 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு வக்ர நிரவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வரும்பொழுது உங்களுக்கு குருவின் மூலநட்சத்திர சஞ்சார பலன்கள் சிரம பலன்களாக மீண்டும் தொடரும். எதிர்பாராத செலவினங்கள், கடின உழைப்பு, கடன் வாங்குதல், சேமிப்பு குறைதல், தேக ஆரோக்யக்குறை – பயண அலைச்சல், வீண் வாக்குவாதம் என பலன்கள் சிரமம் தரும். இந்த சூழ்நிலை 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் குருவின் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்க கடனுதவி, பொருளாதார மேன்மை, தேக ஆரோக்யம், சுபகாரிய அனுகூலம் என பலன்கள் 18.2.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை, முன்கோபம், டென்ஷன் என சூழ்நிலைகள் சிரமப்படுத்தும். பொருளாதார சூழ்நிலை கள் தாராளமாக இருக்கும்.
இந்த சூழ் நிலைகள் 26.3.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு சுபகாரிய அனுகூலம் – தனதான்ய விருத்தி, சுபகாரிய ஈடுபாடு, குடும்ப மேன்மை என சுபபலன்கள் அதிசார பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் சிரம பலன்களை தருவார். 9.7.2020 முதல் குரு உத்திராட நட்சத்திர முதல் பாத சஞ்சாரம் செய்யும் பொழுது – தனுசு ராசியில் அவர் மீண்டும் சிரம பலன்கள் உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை, டென்ஷன், முன்கோபம் என சிரம பலன்கள் தொடரும். இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். சனி, கேதுவின் சாதக பலன்கள் இருப்பதால் குருவின் பொதுப்பலன்கள் சிரமமாக இருந்தாலும் சமாளிக்கும் வகையில் இருக்கும். 15.12.2020 முதல் குரு – மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நீங்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு துர்க்கையம்மன் வழிபாடு செய்வது உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமில்லை.
தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 5ஆமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது ஐந்தாமிட சஞ்சார பலன்கள் சிரம பலன்களாக இருந்தாலும் குருசேர்க்கை சனி, கேதுவின் சிரம பலன்களை குறைக்கும். குருவின் ஐந்தாமிட சஞ்சார பலன்களாக சுபகாரிய அனுகூலம், தனலாபம், திருமணம், புத்திர பாக்யம் போன்ற நற்பலன்கள் செல்வாக்கு பெருகுதல் பூர்வீக சொத்து மூலமாக பொருளாதார வரவு என ஆண்டு முழுவதும் பொதுப் பலன்களாக இருக்கும். அதேபோல் குருவின் 5, 7, 9ம் பார்வை உங்கள் ராசிக்கு 9ஆமிடம் 11ஆமிடம், ராசியில் பதிவதால் வியாபாரத்தில் முதலீடு பெருகும். தீர்த்த யாத்திரை செல்லல், திருப்பணி செய்தல், தனலாபம், பதவி உயர்வு, சுகபோகம், சுக சவுக்யம் பெருகுதல், இடமாற்றம் என பார்வை பலன்கள் ஆண்டு முழுவதும் பொதுப்பலன்களாக இருக்கும்.
குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள், 13.3.2019 முதல் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம், எதிர்பாராத பணவரவு, பூர்வீக சொத்து பிரச்னைகளில் அனுகூலம், வீடு, மனை லாபம் என நற்பலன்கள் 10.4.2019 வரை நீடிக்கும். கற்பக விநாயகர் வழிபாடு இந்த கால கட்டத்தில் உத்தமம். அதன்பிறகு குரு வக்ரமாகி மீண்டும் தனுசு ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். இது உங்களுக்கு பயண அலைச்சல், தாயார் உடல் ஆரோக்ய கவனம், கடின உழைப்பு, தொழில் ரீதியான விஷயங்களில் செலவினங்கள் என சிரம பலன்களை தருவார். இந்த சூழ்நிலை 28.10.2019 வரை நீடிக்கும். அதன்பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வரும் பொழுது உங்களுக்கு குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் மீண்டும் தொடரும். பொருளாதார முன்னேற்றம், எதிர்பாராத பணவரவு, பூர்வீக சொத்து பிரச்னைகளில் அனுகூலம், வீடு, மனை, லாபம் என நற்பலன்கள் 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் குருவின் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு கடன் தீருதல், பொருளாதார மேன்மை, சுபகாரிய அனுகூலம் என நற்பலன்கள் 18.2.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு குரு உத்திராட நட்சத்திர சஞ்சார செய்யும் பொழுது உங்களுக்கு உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை தேக ஆரோக்ய குறை அரசு காரிய அனுகூலம் தொழில் ரீதியான பாராட்டு, கவுரவம் கிட்டும். கடின உழைப்பு, டென்ஷன் என சூழ்நிலைகள் சிரமப்படுத்தும். பொருளாதார சூழ்நிலை தாராளமாக இருக்கும்.
இந்த சூழ்நிலை 26.3.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு அதிகாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு பணச்சிக்கல், கடன் வாங்குதல், குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள், மனச்சோர்வு உடற்சோர்வு என சிரம பலன்கள் இந்த அதிகார பலன்கள் 2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு அதிகாரம் நீங்கி மகர ராசியிலிருந்து மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் உங்களுக்கு கடின உழைப்பு டென்ஷன், முன்கோபம், தொழில் ரீதியான மேன்மை அரசு காரிய அனுகூலம் என பலன்கள் இருக்கும்.
இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். பொதுப்பலன்கள், பார்வை பலன்கள் நற்பலன்களாக இருப்பதால் சனி, கேதுவின் சிரம பலன்கள் குரு சேர்க்கையால் மட்டுப்படும். மொத்தத்தில் குருப்பெயர்ச்சி உங்களுக்கு உத்தமம். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நீங்கள் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்தால் சனி, கேதுவின் சிரமங்களுக்கு பரிகாரமாக அமையும். ராகுவும் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய சிரமங்கள் குறைந்து நற்பலன்கள் அதிகமாக இருக்கும்.
கன்னி

உத்திரம் 2,3,4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2ம் பாதம்
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி நாலாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது நாலாமிட சஞ்சார பலன்கள் சிரமங்களை கொடுத்தாலும் குருவின் சேர்க்கை இந்த சிரமங்களை குறைக்கும். குருவின் நாலாமிட சஞ்சாரம் சிரமத்தை கொடுக்கும். உறவினர்களிடையே மன கசப்பு, வீண் பிரயாணங்கள், பயண அலைச்சல், வீண் செலவுகள், தேக ஆரோக்ய குறை, போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை, தாயார் தேக ஆரோக்ய குறை என சிரம பலன்கள் பொதுப் பலன்களாக ஆண்டு முழுவதும் இருக்கும். அதே போல் குருவின் 5, 7, 9ம் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாமிடம், பத்தாமிடம், 12மிடம் என பதிலதால் உங்களுக்கு தேக ஆரோக்யம் கூடும். நோய் விலகும். ஆயுள் விருத்தியாகும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு, வேலை பளு அதிகமாகுதல். உயரதிகாரிகளின் அனுசரணையற்ற போக்கு சுபச் செலவினங்கள், எதிர்பாராத செலவு என பார்வை பலன்கள் இருக்கும். இதுவும் ஆண்டு முழுவதும் இருக்கும்.
குருவின் மூல நட்சத்திர சஞ்சாரம் 13.3.2019 முதல் உங்களுக்கு திடீர் பணவரவு, எதிர்பாராத லாபம் ஆன்மிக ஈடுபாடு, இறையருள், சுகபோகம், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் என பலன்கள் இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். குருவின் மூல நட்சத்திர சஞ்சாரம் 10.4.2019 வரை நீடிக்கும். கற்பக விநாயகர் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். 10.4.2019க்கு பிறகு குரு வக்ரமாகி விருச்சிக ராசிக்கு மீண்டும் வருகிறார். கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். வக்ரபெயர்ச்சி பலன்களாக காரிய அனுகூலம், குடும்ப மகிழ்ச்சி உறவுகள் மேம்படுதல் என சூழ்நிலை இருக்கும். 28.10.2019 வரை இது நீடிக்கும். அதன்பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வரும் பொழுது உங்களுக்கு குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் மீண்டும் தொடரும். திடீர் பணவரவு, எதிர்பாராத லாபம், ஆன்மிக ஈடுபாடு, இறையருள், சுகபோகம், குடும்பத்தில் வீண்வாக்கு வாதம் என பலன்கள் இருக்கும்.
இந்த சூழ்நிலை 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் குருவின் பூராட நட்சத்திர சஞ்சார பலன்கள், உங்களுக்கு கடனுதவி, பணவரவு, பொருளாதார மேன்மை, சுபச் செலவினங்கள், வீடு, மனை போன்ற விஷயங்களில் மராமத்து செலவினங்கள் என சூழ்நிலை இருக்கும். 26.3.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு அதிகாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு சுபகாரிய அனுகூலம், பூர்வீக சொத்துக்கள் அனுகூலம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம், திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம் என சுப பலன்கள் நற்பலன்களாக இருக்கும்.
இந்த சூழ்நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் சிரம பலன்களை தருவார். 9.7.2020 முதல் குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு உறவினர்களிடையே மனக்கசப்பு, முன்கோபம், டென்ஷன், எதிர்பாராத செலவினங்கள், காரியத்தடை என சிரம பலன்கள் தொடரும்.
இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். சனி, கேதுவின் சிரமங்கள் வேறு இருப்பதால், குருவின் சேர்க்கை சிரமங்களை குறைக்கும். இந்த சூழ்நிலை கற்பக விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தால் சிரமங்கள் குறையும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை என்பதால் கற்பக விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
துலாம்

சித்திரை 3,4ம் பாதம் ஸ்வாதி, விசாகம் 1,2,3 ம் பாதம்
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி மூன்றாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது மூன்றாமிட சஞ்சாரம் உஙக்ளுக்கு நற்பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் குரு மூன்றாமிட சஞ்சார பலன்களாக குடும்பத்தில் வீண் குழப்பங்கள், காரியத்தடை, டென்ஷன் கோபம் என பலன்களை ஆண்டு முழுவதும் பொதுப் பலன்களாக இருக்கும். குருவின் சேர்க்கை, கேது, சனி பலன்களில் சிறப்பு கூடும். ஆண்டு முழுவதும் ஓரளவு நன்மை, தீமை கலந்து இருக்கும். இறையருள் தெய்வ அனுகூலம் உங்களுக்கு மிகுந்திருக்கும். அதே போல் குருவின் 5, 7, 9ம் பார்வை உங்கள் ராசிக்கு 7ஆமிடம் 9ஆமிடம், 11ஆமிடத்தில் பதிவதால் உங்களுக்கு திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம், தொழில் அபிவிருத்தி முதலீடு பெருகுதல், தீர்த்த யாத்திரை செல்வது. திருப்பணி செய்தல், தனலாபம், பதவி உயர்வு, சுகபோகம் என நற்பலன்கள் ஆண்டு முழுவதும் பார்வை பலன்களாக இருக்கும். குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.3.2019 முதல் உங்களுக்கு எதிர்பாராத தனபிராப்தி ஆன்மிக ஈடுபாடு, உறவினர் பகை, இறையருள் சுபகாரிய முன்னேற்றம், தேக ஆரோக்யம், எதிர்பாராத செலவினங்கள் என பலன்கள் இருக்கும். குருவின் இந்த பலன்கள் 10.4.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார்.
இந்த சூழ்நிலை உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, வாக்கு வன்மை, உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடுதல் என நற்பலன்கள் வக்ர பலன்களாக இருக்கும். இந்த நிலை 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வரும் பொழுது உங்களுக்கு குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் எதிர்பாராத பணவரவு, ரிப்பேர் செலவினங்கள், என சிரம பலன்கள் இருக்கும். வளர்ப்பு பிராணிகளால் மகிழ்ச்சி, இறையருள், ஆன்மிக ஈடுபாடு என நற்பலன்கள் 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் குருவின் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு கடனுதவி சுப காரிய ஈடுபாடு, வீடு, மனை போன்ற விஷயங்களில் ஈடுபாடு, பணவரவு, சுபச் செலவுகள், சுபகாரிய ஈடுபாடு என பூராட நட்சத்திர சஞ்சார பலன்கள் இருக்கும். இந்த நிலை 18.2.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு அரசு சார்ந்த நன்மைகள், தொழில் ரீதியான பாராட்டு, கவுரவம், பண வரவுகள், தொழில் முன்னேற்றம் என சூழ்நிலைகள் இருக்கும்.
இந்த சூழ்நிலைகள் 26.3.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இதனால் உங்களக்கு உறவினர்களிடையே மனக்கசப்பு வீண் பிரயாணங்கள், பயண அலைச்சல், வீண் செலவுகள், தேக ஆரோக்ய குறை, போக்குவரத்தில் முன்னெச்ச ரிக்கை, தாயார் தேக ஆரோக்யகுறை என சிரம பலன்களை தருவார். இது 8.7.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் நற்பலன்களை வழங்குவார். 9.7.2020 முதல் குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது தனுசு ராசியில் அவர் அரசு நன்மை, தொழில் ரீதியான முன்னேற்றம், பாராட்டு, கவுரவம், பண வரவுகள் என சூழ்நிலை சுப பலன்களாக இருக்கும். 14.12.2020 வரை இந்த நிலை நீடிக்கும். குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமில்லா விட்டாலும் சனி, கேது சஞ்சாரம் சாதமாக உள்ளது. 15.12.2020 முதல் குரு, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு நீங்கள் துர்க்கையம்மன் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உங்களை சிரமங்களுக்கு பரிகாரமாகும்.
விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி இரண்டாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது இரண்டாமிடத்திலிருந்து உங்களுக்கு சிரம பலன்களை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நற்பலன்களை வழங்குவார். வாக்கு, தனம், குடும்ப ஸ்தானங்கள் சிறப்பாக இருக்கும். தனலாபம், குடும்ப மேன்மை, உங்கள் பேச்சுக்கு மரியாதை என குரு ஆண்டு முழுவதும் நற்பலன்களை பொதுப் பலன்களாக வழங்குவார்.
குருவின் சேர்க்கை சனி, கேதுவின் சிரமங்கள் குறையும். அதே போல் குருவின் 5, 7, 9ஆம் பார்வைகள் ராசிக்கு 6ஆமிடம், 8ஆமிடம், 10ஆமிடத்தில் பதிவதால் உங்களுக்கு தேக ஆரோக்யக் குறை, கடன் படுதல், நோய் விலகுதல், ஆயுள் விருத்தி, கடின உழைப்பால் பணிச்சுமை தொழில் ரீதியான சிரமங்கள் மேலதிகாரிகளின் அனுசரணை இன்மை என பார்வை பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். ஸ்தான பலன் நற்பலன், பார்வை பலன்கள் சிரமமாக இருப்பதால் நன்மை தீமை மாறி மாறி இரு்ககும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.3.2019 முதல் உங்களுக்கு தனலாபம், ஆன்மிக சிந்தனை, வாக்குபலம், குடும்ப மேன்மை, திடீர் பணவரவு, சுபகாரிய ஈடுபாடு, தொழில் ரீதியான கடின உழைப்பு என பலன்கள் இருக்கும்.
இந்த சூழ்நிலை 10.4.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். வக்ர பலன்களாக எதிலும் மந்த நிலை, சூழ்நிலை மாற்றம், வீண் பிரச்னைகள் என சிரம பலன்கள் 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வரும் பொழுது உங்களுக்கு குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் மீண்டும் வரும். தனலாபம், ஆன்மிக சிந்தனை, வாக்கு பலம், குடும்ப மேன்மை, திடீர் பணவரவு, சுபகாரிய ஈடுபாடு, தொழில் ரீதியான கடின உழைப்பு, என பலன்கள் 16.11.2019 வரை நீடிக்கும். 17.11.2019 முதல் குருவின் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம், சுபகாரிய அனுகூலம், வாக்கு சாதுர்யம், வீடு, மனை போன்ற விஷயங்களில் ஈடுபாடு, புதிய முயற்சிகள் என நற்பலன்கள் 18.2.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றம், புதிய முயற்சி அனுகூலம், அரசு சார்ந்த விஷயங்களில் நன்மை, தேக ஆரோக்யம், எதிர்ப்பு விலகல் என உத்திராட நட்சத்திர சஞ்சார பலன்கள் 26.3.2020 வரை நீடிக்கும்.
அதன்பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு சென்று உங்களுக்கு சிரம பலன்களை தருவார். பதவி இறக்கம், காரியத்தடை, குடும்பத்தில் வீண் சச்சரவு என சிரம பலன்கள் 8.7.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் வரும். அரசு சார்ந்த விஷயங்களில் நன்மை, தேக ஆரோக்யம், செல்வாக்கு என நற்பலன்கள் 14.12.2020 வரை நீடிக்கும். இந்த குருப்பெ யர்ச்சியை பொறுத்தவரை உங்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். ஆனால் சனி, கேது, ராகு ஆகிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது நன்மை தரும்.
தனுசு

மூலம், பூரம், உத்திராடம் 1ம் பாதம்
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு வந்து 1ஆமிட ஸ்தான பலன்களை தருவார். ஏற்கனவே ஏழரை சனியின் ஜென்ம சனியும் ராசியிலிருக்கிறார் உடன் கேதுவும் இருக்கிறார். ராசியில் மூன்று கிரக சேர்க்கை சிரமமாகத்தான் இருக்கும். குரு ராசியில் சஞ்சாரம் செய்வது, உங்களுக்கு சூழ்நிலை மாற்றம், சோம்பல், மனச்சோர்வு, உடற்சோர்வு, வீண் சச்சரவு என சிரமமான சூழ்நிலைகள் ஆண்டு முழுவதும் பொதுப் பலன்களாக இருக்கும். அதே போல் குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் ஸ்தானங்களில் பதிவதால், உங்களுக்கு பூர்வீக சொத்து, குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்யம், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண சுபகாரியம், தொழில் அபிவிருத்தி முதலீடு பெருகுதல், தீர்த்த யாத்திரை திருப்பணி செய்தல் என சுபபலன்கள்
குருபார்வை பலன்களாக ஆண்டு முழுவதும் இருக்கும்.
குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.3.2019 முதல் உங்களுக்கு சூழ்நிலை மாற்றம், மனச்சோர்வு, உடற்சோர்வு, என மந்த நிலையாக இருந்தாலும் எதிர்பாராத பணவரவுகள், பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கும். சனி, கேதுவின் சிரமங்கள் குரு சேர்க்கையால் குறைந்து ஓரளவு சமாளிக்கும் வகையில் இருக்கும். வீண் சச்சரவுகள் வரும். பொறுமையுடன் சூழ்நிலையை அனுசரிப்பது உத்தமம். விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு சிரம பரிகாரமாக இருக்கும்.
குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் 10.4.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். அதன் பலன்களாக உங்களுக்கு சுபச் செலவினங்கள், வெளியூர் பயணம், வீண் செலவுகள், பயண அலைச்சல், சூழ்நிலை மாற்றம் என சிரம பலன்கள் இருக்கும். இந்த நிலை 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வரும் பொழுது உங்களுக்கு குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் மீண்டும் தொடரும்.
இதனால் உடல் சோர்வு, மனச்சோர்வு, பொருளாதார முன்னேற்றம், எதிர்பாராத பணவரவு, தேக ஆரோக்யகுறை என பலன்கள் 16.11.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குருவின் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு சுபகாரிய அனுகூலம், சுபச் செலவினங்கள், பணவரவுகள், பயண அலைச்சல் என பலன்கள் 18.2.2020 வரை தொடரும். அதன்பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு தேக ஆரோக்யக்குறை, வீண் செலவு, அரசு நன்மை, தொழில் முன்னேற்றம் என பலன்கள் 26.3.2020 வளர நீடிக்கும்.
அதன்பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார்.
இதனால் உங்களுக்கு வாக்கு பலம், பண வரவுகள், குடும்ப சூழ்நிலையில் முன்னேற்றம், செல்வாக்கு என பலன்கள் 8.7.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் தேக ஆரோக்ய குறை, வீண் செலவு அரசு சார்ந்த நன்மை, தொழில் வழங்குவார். இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமில்லை. ராகு, கேதுவும் சாதமற்ற நிலை ஏழரை சனி. ஆக நீங்கள் கண்டிப்பாக விநாயகர் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு, பெருமாள் வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம். தினமும் காக்கைக்கு உணவு வைத்தபின் சாப்பிடுங்கள். சிரமங்கள் குறையும்.
மகரம்

உத்திரம் 2,3,4ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதம்
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி பன்னிரெண்டாமிட ஸ்தான பலன்களை தருவார். ஏற்கனவே சனி, கேது பன்னிரெண்டாமிடத்திலிருந்து உங்களுக்கு சுபச்செலவினங்கள், வெளியூர் பயணம், வீண் விரயங்கள் சூழ்நிலை மாற்றம் என சிரம பலன்களை ஆண்டு முழுவதும் வழங்குவார். சனி, கேது பன்னிரெண்டாமிடத்திலிருந்து உங்களுக்கு சுபச்செலவினங்கள், வெளியூர் பயணம், வீண் விரயங்கள் சூழ்நிலை மாற்றம் என சிரம பலன்களை ஆண்டு முழுவதுமு் வழங்குவார். சனி, கேது சேர்க்கை பன்னிரெண்டாம் இடத்தில் இருப்பது சிரமங்கள் அதிகம். எனவே விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு அவசியம் தேவை. அதுதான் சிரம பரிகாரமாகும். குருவின் 5,7,9ம் பார்வை உங்கள் ராசிக்கு 4ம் இடம், 6ம் இடம், 8ம் இடத்தில் பதிவதால் உங்களுக்கு தனவிருத்தி, கல்வியில் முன்னேற்றம், கடன் வாங்குதல், தேக ஆரோக்யக்குறை, தேக ஆரோக்ய முன்னேற்றம், நோய் விலகுதல், ஆயுள் விருத்தி என பார்வை பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருப்பது போல் நன்மை – தீமை மாறி மாறி இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். குருவின் மூலம் நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.3.2019 முதல் உங்களுக்கு பணவரவு, பொருளாதார மேன்மை, சுபச் செலவினங்கள், பயண அலைச்சல், வீண் செலவினங்கள், உடல் அசதி, மனச்சோர்வு என சிரமங்கள் 10.4.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். வக்ர பலன்களாக நீங்கள் எண்ணிய விஷயங்கள் அனுகூலமாகும். தனலாபம், வீடு, மனை போன்ற விஷயங்கள் லாபம் தரும். பணவரவுகள் சிரமங்களை குறைக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். இந்த சூழ்நிலை 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வரும்பொழுது குருவின் மூல நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு பணவரவுகள், சுபச் செலவினங்கள், ஆன்மிக ஈடுபாடு, பிரயாண அலைச்சல், வீண் செலவினங்கள் என சூழ்நிலை இருக்கும்.
இந்த நிலை 16.11.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு பூராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது சுபகாரிய அனுகூலம், சுபச்செலவு, உறவுகள் மேன்மை, கடன் பிரச்னைகள் தீருதல் – தேக ஆரோக்ய முன்னேற்றம் என பலன்கள் இருக்கும். இந்த நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திரம் சஞ்சாரம செய்யும் பொழுது உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை, அரசு காரிய அனுகூலம், தொழில் ரீதியான முன்னேற்றம், பண விரயம், பயண அலைச்சல் என பலன்கள் இருக்கும். இது 26.3.3020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு வரும் பொழுது சூழ்நிலை மாற்றம், சோம்பல், மந்த நிலை, கடின உழைப்பு, காரியத்தடை, குடும்பத்தில் வீண் சச்சரவு என பலன்கள் இருக்கும். இந்த நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும், உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை அரசு காரிய அனுகூலம், தொழில் ரீதியான முன்னேற்றம், பண விரயம், பயண அலைச்சல் என பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். இந்த குருப் பெயர்ச்சியை பொறுத்தவரை உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை தான்! அத்துடன் சனி, கேதுவும் இணைந்திருப்பதால் நீங்கள் விநாயகர் வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்வது சிரமப் பரிகாரமாக அமையும். ஏழரை சனி என்பதால் நீங்கள் தினமும் காக்கைக்கு உணவு வைத்த பின் சாப்பிடுவது உத்தமம். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம் , சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம்
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 11ம் இடம் லாபஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனியும், கேதுவும் 11ம் இடத்தில் இருப்பது சிறப்பு, லாபஸ்தானத்தில் சனி, கேது, குரு ஆகிய மூன்று கிரகங்கள் இருப்பது மூன்று மடங்கு லாபம். இந்த குருப் பெயர்ச்சியில் அதிக பலன்களை பெறுவதில் கும்ப ராசி முதலிடம் பெறுகிறது!
குருவின் லாபஸ்தான பலன்களாக நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும், வீடு, மனை போன்ற விஷயங்கள் லாபம் தரும். தனலாபம், சுகசவுக்யம், சுகபோகம், புதிய முயற்சிகள் அனுகூலம் எதிர்பாராத பணவரவு என லாபகரமான பலன்கள் ஆண்டு முழுவதும் நற்பலன்கள் இருக்கும். அதே போல் குருவின் 5,7,9ம் பார்வை உங்கள் ராசிக்கு 3ம் இடம், 5ம் இடம், 7ம் இடம் பதிவதால் உங்களுக்கு இளைய சகோதரர் மேன்மை, தனவிரயம், பூர்விக சொத்து அனுகூலம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம், திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம், தொழில் அபிவிருத்தி என பார்வை பலன்கள் ஆண்டு முழுவதும் இருக்கும். குருவின் மூலம் நட்சத்திர சஞ்சாரம் பலன்கள் 13.3.2019 முதல் உங்களுக்கு பணவரவு, பொருளாதார மேன்மை, வீடு, மனை வாங்குதல், வியாபார விருத்தி, சுக சவுக்யம், என நற்பலன்கள் 10.4.2019 வரை நீடிக்கும் அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்வார். வக்ர பலன்களாக உங்களுக்கு தொழில் ரீதியான சிரமங்கள் கடின உழைப்பு பணவிரயம். கடன் வாங்குதல் என சிரமங்கள் இருக்கும். இந்த நிலை 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் – தனுசு ராசிக்கு வந்து – மூல நட்சத்திர சஞ்சார பலன்களை வழங்குவார். அப்பொழுது மீண்டும் பொருளாதார மேன்மை, வீடு, மனை வாங்குதல் வியாபார விருத்தி, சுகசவுக்யம் என நற்பலன்களை வழங்குவார். இந்த நிலை 16.11.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு பூராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது உறவுகள் மேன்மை, தனலாபம், பணவரவுகள், ஆபரண சேர்க்கை என நற்பலன்கள் தொடரும். சுப காரிய ஈடுபாடு, செல்வாக்கு என பலன்கள் இருக்கும். இந்த சூழநிலை 18.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது அரசு சார்ந்த நன்மைகள், கவுரவம், தொழில் மேன்மை, தனலாபம், பதவி சுகசவுக்யம் என நற்பலன்கள்
இருக்கும்.
இந்த சூழ்நிலை 26.3.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு வரும்பொழுது சுபச்செலவினங்கள் தூரதேச பயணம், பணவிரயம், சூழ்நிலை மாற்றம், டென்சன், கடின உழைப்பு என சிரம பலன்கள் இருக்கும். இந்த நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் உங்களுக்கு அரசு சார்ந்த நன்மைகள், கவுரவம், தொழில்மேன்மை, பதவி உயர்வு, பாராட்டு, சுகசவுக்கியம் என நற்பலன்களை தொடர்ந்து வழங்குவார். எதிர்பாராத நன்மைகள் மகிழ்ச்சி தரும்.
இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு லாபகரமான பலன்களையும் நற்பலன்களையும் வழங்குவார். குரு, சனி, கேது மூன்றும் லாபகரமான பலன்களை வழங்குவார்கள். ராகு மட்டும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் நீங்கள் துர்க்கையம்மன் வழிபாடு செய்வது சிரமப் பரிகாரமாக இருக்கும். விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள் வழிபாடு நன்மை தரும். குருப்பெயர்ச்சி உங்களுக்கு உத்தமம். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
மீனம்

பூரட்டாதி 4ம் பாதம், ரேவதி, உத்திரட்டாதி,
13.3.2019 முதல் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 11ம் இடம் லாபஸ்தான பலன்களை வழங்குவார்கள். ஏற்கனவே சனியும், கேதுவும் 10ம் இடம் ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனியும், கேதுவும் பத்தாமிட சஞ்சாரம் செய்வது நன்மை, தீமை கலந்த சூழ்நிலை இருக்கும். குருவின் பத்தாமிட ஸ்தான பலன்கள் உங்களுக்கு தொழில் ரீதியான சிரமங்கள், கடின உழைப்பு, மேலதிகாரிகளின் அனுசரனையின்மை, பண நெருக்கடி, கடன் வாங்குதல் என சிரம பலன்களை பொதுப் பலன்களாக ஆண்டு முழுவதும் வழங்குவார். பத்தில் கேது இருப்பது சாதகமான சூழ்நிலை குரு, சனி சிரமம் இருந்தால் கேது நற்பலன்கள் தருவார். பயண அலைச்சல் என பலன்கள் பொதுப் பலனாக இருக்கும். அதே போல் குருவின் 5,7,9ம் பார்வை உங்கள் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 6 இடம் என பதிவதால் உங்களுக்கு தனவிருத்தி, பணவரவுகள், குடும்ப மகிழ்ச்சி – சுகஜீவனம், சுகபோஜனம் கல்வியில் நல்ல முன்னேற்றம், கடன் வாங்குதல், தேக ஆரோக்யக்
குறை – பயண அலைச்சல் என சிரமங்களும் பார்வை பலன்களாக இருக்கும். இது ஆண்டு முழுவதும் உள்ள பலன். குருவின் மூல நட்சத்திர சஞ்சார பலன்கள் 13.3.2019 முதல் உங்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழில்மேன்மை, மனச்சோர்வு, உடல் சோர்வு,உறவினர் மனக்கசப்பு, பொருளாதார முன்னேற்றம் என பலன்கள் 10.4.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்கரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது கல்வியில் முன்னேற்றம்,
எண்ணிய எண்ணம் ஈடேறுதல் – தனலாபம், உறவுகள் மேன்மை, குடும்ப மகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம், முயற்சிகளில் வெற்றி என நற்பலன்களை வழங்குவார். இந்த சூழ்நிலை 28.10.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு வக்ர நிவர்த்தியாகி மீண்டும் தனுசு ராசிக்கு வந்து மூல நட்சத்திர சஞ்சார பலன்களாக எதிர்பாராத பணவரவு, தொழில் மேன்மை, மனச்சோர்வு, உடல் சோர்வு, உறவினர் மனக்கசப்பு – பயண அலைச்சல் – பொருளாதார மேன்மை என பலன்கள் இருக்கும். இந்த நிலை 16.11.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு பூராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது சுபகாரிய அனுகூலம். உத்தியோகம் தொழிலில் எதிர்பாராத சிரமங்கள், பெண்களால் வீண் பிரச்னை வரும். பொருளாதார மேன்மை உண்டாகும். ஆபரண சேர்க்கை – செல்வாக்கு என பலன்களும் இருக்கும்.
இந்த சூழ்நிலை 18.2.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது அரசு சார்ந்த நன்மைகள், கவுரவம், பதவி உயர்வு, வீண் சிரமங்கள் உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை என பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 26.3.3020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு வரும் பொழுது, உங்களுக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும். தனலாபம், வீடு, மனை போன்ற விஷயங்கள் லாபகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றம் வரும். இந்த சூழ்நிலை 8.7.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் உங்களுக்கு அரசு சார்ந்த நன்மைகள், கவுரவம், பதவி உயர்வு, பயண அலைச்சல், வீண் சிரமங்கள், உஷ்ணம் சார்ந்த உடல் உபாதை என பலன்கள் இருக்கும். இந்த சூழ்நிலை 14.12.2020 வரை நீடிக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமில்லாவிட்டாலும் வக்ர பலன், அதிசார பலன்கள் சிறப்பாக இருக்கும் உங்களுக்கு ராகு, சனி, குரு சாதகமில்லை எனவே தட்சிணாமூர்த்தி வழிபாடு, பெருமாள் வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். கேது மட்டுமே சாதகமாக இருப்பதால் விநாயகர் வழிபாடு நன்மை தரும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.