அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு - அமைச்சர் மூர்த்தி பேட்டி

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2022 21:24

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது., இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் நடைபெற்று முடிந்ததை பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறும்போது. முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று தமிழர்களின் உணர்வுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை கொரோனா விதிமுறைகளுடன் அரசு கட்டுப்பாடுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறது.,

 அனைவரும் வீட்டிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டியை காண வேண்டும். இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் இல்லாத வரலாற்றில் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவு செய்து தகுதியான நபர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் டோக்கன் முறையில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் இருந்த வந்த காரணத்தினால் இந்த ஆண்டு எந்தவித பதட்டமும் இன்றி எளிய முறையில் திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்து பாதுகாப்பான முறையில் நாளை முதல் இன்னும் இரு தினங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.


ஜல்லிக்கட்டு போட்டியை காண சிறப்பு விருந்தினர் யாரும் வர உள்ளார்களா என்ற கேள்விக்கு.?


கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால்., தமிழகர்களின் உணர்வை மதிக்கின்ற வகையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது இதில் சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை., மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடு இல்லாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசு வழங்கப்பட உள்ளதால் என்ற கேள்விக்கு.?அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு பைக் வழங்கப்படுகிறது., மேலும்., பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டு உரிமையாளர்களுக்கும் மதிக்கத்தக்க அளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்படும்.


ஆன்லைன் பதிவு செய்தவர்களில் சிலருக்கு இன்னும் டோக்கன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?

எந்தப் பாகுபாடும் இல்லாமல் குறைபாடும் இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் டோக்கன் வழங்கப்படுகிறது கடந்த காலத்தில் ஏற்பட்ட முறைகேடு இந்த ஆண்டு நடைபெறவில்லை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என்றார்..

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது., இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் நடைபெற்று முடிந்ததை பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறும்போது.

முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று தமிழர்களின் உணர்வுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை கொரோனா விதிமுறைகளுடன் அரசு கட்டுப்பாடுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறது., அனைவரும் வீட்டிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டியை காண வேண்டும். இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் இல்லாத வரலாற்றில் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவு செய்து தகுதியான நபர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் டோக்கன் முறையில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் இருந்த வந்த காரணத்தினால் இந்த ஆண்டு எந்தவித பதட்டமும் இன்றி எளிய முறையில் திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்து பாதுகாப்பான முறையில் நாளை முதல் இன்னும் இரு தினங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது

ஜல்லிக்கட்டு போட்டியை காண சிறப்பு விருந்தினர் யாரும் வர உள்ளார்களா என்ற கேள்விக்கு.?

கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால்., தமிழகர்களின் உணர்வை மதிக்கின்ற வகையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது இதில் சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை., மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடு இல்லாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசு வழங்கப்பட உள்ளதால் என்ற கேள்விக்கு.?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு பைக் வழங்கப்படுகிறது., மேலும்., பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டு உரிமையாளர்களுக்கும் மதிக்கத்தக்க அளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்படும்.

ஆன்லைன் பதிவு செய்தவர்களில் சிலருக்கு இன்னும் டோக்கன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?

எந்தப் பாகுபாடும் இல்லாமல் குறைபாடும் இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் டோக்கன் வழங்கப்படுகிறது கடந்த காலத்தில் ஏற்பட்ட முறைகேடு இந்த ஆண்டு நடைபெறவில்லை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.