பஞ்சாபில் பாதுகாப்பு குறைபாடுகள்: காங்., அரசின் அலட்சியத்தை சோனியா காந்தியிடம் அறிவுறுத்த பா.ஜ.க. தொழில் பிரிவு சார்பில் தபால் அனுப்பி நூதன போராட்டம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2022 19:43

பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், காங்கிரஸ் கட்சியின் அலட்சியத்தை சோனியா காந்தியிடம் அறிவுறுத்தும் வகையில் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொழில் பிரிவு சார்பில் கடிதம் எழுதி தபாலில் அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   கடந்த 5 ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் மத்திய அரசு சார்பில் 42,000 கோடி செலவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள பிரதமர் மோடி செல்லும் சாலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமரின் அன்றைய சுற்றுப்பயணம் தடைபட்டது. காங்கிரஸ் கட்சியினரின் தீவிரவாத போர்வையிலான போராட்டம் தான் பிரதமரின் நிகழ்ச்சி தடையாவதற்கு காரணமாக அமைந்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், காங்கிரசார் அலட்சியம் குறித்து தலைவரான சோனியா காந்திக்கு தெரிவிக்கும் வகையிலும் நெல்லை பாஜக தொழில் பிரிவு சார்பில் கடிதம் எழுதி  தபாலில் அனுப்பும் போராட்டம் இன்று பாளையங்கோட்டை தலைமை தபால்  அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொழில் பிரிவு தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கடிதங்களை தபால் பெட்டியில் அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.