சென்னை நகரில் ஒமிக்ரான் – கொரோனோ விழிப்புணர்வு பேரணி: இணைக்கமிஷனர் நரேந்திரன் நாயர் துவங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 29 டிசம்பர் 2021 18:04

சென்னை

சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

ஒமிக்ரான் கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது  மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து  புனிததோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (28.12.2021) மாலை சுமார் 5.00 மணியளவில் நடந்த காவலர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்) நரேந்திரன்நாயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கத்திப்பாரா மேம்பாலம் வழியாக அடையார், தி.நகர் மற்றும் புனிததோமையர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று, அந்தந்த காவல் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் புனித தோமையர் மலை துணை ஆணையாளர் அருண் பாலகோபாலன், திநகர் துணை ஆணையாளர் ஹரிகிரண் பிரசாத், அடையார் துணை ஆணையாளர் (பொறுப்பு) மகேந்திரன் மற்றும் 120 சுற்றுக் காவல் ரோந்து காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.