ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டவர் கைது

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2021 14:43

சென்னை

கடந்த 8ம் தேதி குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முப்படை தலைமை தளபதி பிபின் ரவாத் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக பொய் செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 153A, 505/1 b, 504 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி, பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.