மழையால் பாதிக்கப்பட்ட ஆரல்வாய்மொழி, தோவாளை ஆகிய பகுதிகளில் காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2021 14:17

 நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆரல்வாய்மொழி மற்றும் தோவாளை ஆகிய பகுதிகளில் இன்று காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பது குறித்து தமிழக காவல் பேரிடர் மீட்பு படையினருக்கு காவல் துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு அறிவுரைகளை வழங்கினார்.தொடர் மழையால்  ஆரல்வாய்மொழி பகுதியில் சிக்கியிருந்த மூதாட்டியை மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைத்த காவல் ஆய்வாளர் மீனா.