சென்னையில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் காவல்துறை மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டனர்

பதிவு செய்த நாள் : 11 நவம்பர் 2021 18:48

சென்னை

சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில், காவல் அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

K-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் சூழ்ந்து அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் மரங்கள் கீழே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழே விழுந்த மரங்களையும்  காவல்துறை  மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தினர்,

இதனையறிந்த K-5 பெரவள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து, மழைநீர் மற்றும் கழிவுநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகு மூலம் சென்று குடிநீர் வழங்கி உதவி செய்து வருகின்றனர்.