திண்டுக்கல்லில் பட்டாசு கடையில் திருட்டு

பதிவு செய்த நாள் : 05 நவம்பர் 2021 22:26

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள பட்டாசு கடையில் திருட்டு நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திண்டுக்கல் யானைத்தெப்பம் அருகே உள்ள பட்டாசு கடையில் மர்ம மனிதர் நள்ளிரவில் உள்ளே புகுந்து பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 1லட்சம் மற்றும் செல்போன், வைர மோதிரம் ஆகியவை திருட்டு இதுகுறித்து நகர் தெற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 திண்டுக்கல்லில் சமீபகாலமாக தொடர்ந்தது கடைகளில் புகுந்து திருத்திகள் நடந்து வருகின்றன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.