காயல்பட்டினத்தில் மீலாது விழா

பதிவு செய்த நாள் : 21 அக்டோபர் 2021 12:03

தூத்துக்குடி

காயல்பட்டணம் - மீலாத் ரசூல் கமிட்டியினர் சார்பாக 20.10.2021 செவ்வாய் கிழமை மாலை 4:30 முதல் 8:30 வரை உத்தம நபியின் உதய தின விழா மஹ்ழரத்துல் காதிரிய்யா வளாகத்தில் வைத்து நடை பெற்றது.

நிகழ்வின் தலைவராக மவ்லவி தவ்பீக் அஹ்மது மிஸ்பாஹி இருந்தார்கள்.

நிகழ்வின் ஆரம்பமாக கிராஅத் என்னும் வேத வசனத்தை மவ்லவி M.s. முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத்  ஓதினார்கள்.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய கீதம் ஒன்றை ஜனாப் முஹம்மத் ஷமீம்  இசைத்தார்கள்.

ஜனாப் சுலைமான் வரவேற்புரை  ஆற்றினார். மாணவ கண்மணிகளுக்கு நற்சான்றிதழ் சர்ட்டிபிகேட் முஹம்மத் முஹ்யித்தீன் (மமினாகார்) வழங்கினார். விழாவின் சிறப்பு பேச்சாளர் மவ்லானா மவ்லவி H.A.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரி  உரை நிகழ்த்தினார்கள்.

நன்றியுரையை ஜனாப் A.H. நெய்னா சாகிப்  நிகழ்த்தினார்.

விழாவில் இறுதியாக அபூர்வ துஆ மவ்லவி செய்யது அப்பாஸ் அலி  ஓதினார்கள்.

குறிப்பாக நாட்டில் அமைதி நிலவிடவும்...வளங்கள் கொழித்திடவும்...கொடிய கொரோனா அகன்றிடவும் இறைவனிடம் பிரார்த்தனை என்னும் து ஆ செய்யப்பட்டது.

விழாவினை பிலால் அமீன் தொகுத்து வழங்கினார்.

விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா பற்றிய தகவல்களை செய்தி தொடர்பாளர் காயல் ஜெஸ்முதீன் வழங்கினார்.