மதுரையில் செய்தியாளர்கள் சார்பில் ஒளிப்பதிவாளர்கள் கொண்டாடிய ஆயுதபூஜை விழா

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 16:20

தமிழகம் முழுவதிலும் ஆயுதபூஜை பண்டிகையானது வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் மதுரை மாவட்ட அனைத்து தொலைக்காட்சி பத்திரிக்கை, செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 செய்தி சேகரிப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களான கேமிராக்கள், லைவ் யூனிட், மொபைல் போன்கள், இரு சக்கர ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது இதில் ஏராளமான தொலைக்காட்சி, பத்திரிகை செய்தியார்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.