மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - பழனி வாலிபர் கைது

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 16:16

முகநூலில் மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த பழனியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். முகநூலில் போலி கணக்கு மூலம் மதுரையை சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக   திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரசாத்,21, வாலிபரை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

 அவரிடம் விசாரணை நடத்தியதில் போலியான கணக்கு மூலம் ஆபாச படங்களை அனுப்பி, ஆபாச வார்த்தைகள் பேசியதும் தெரியவந்தது.